குழப்பும் அறிவியல் சொற்கள்/இயற்பியல்
அணுஎண், அணுஎடை
[தொகு]அணு எண் - அணுவில் உள்ள புரோட்டான் அல்லது எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
அணு எடை - அணுக்கருவில் உள்ள புரோட்டான் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை
நிறை, எடை
[தொகு]ஒரு பொரு்ள் புவியில் உள்ள வரை நிறையும் எடையும் சமம். ஒரு பொருளின் எடை என்பது அதன் நிறை மற்றும் அதன் மீது செயல்படும் ஈர்ப்பாற்றலின் பெருக்குத் தொகை. விண்வெளியில் ஈர்ப்பாற்றல் இல்லாததால் எடையற்ற நிலை ஏற்படும்.
உருகுநிலை, உறைநிலை
[தொகு]உருகுநிலை - பொருள் ஒன்று திண்ம நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறும் போதுள்ள வெப்பநிலை உறைநிலை - பொருள் ஒன்று நீர்மநிலையில் இருந்து திண்மநிலைக்கு மாறும்போதுள்ள வெப்பநிலை பல பொருட்களின் உருகுநிலையும் உறைநிலையும் ஒன்றாக இருக்கும்.
மின்னழுத்தம், மின்னோட்டம்
[தொகு]மின் நகர்வு விசை(EMF-electromotive force)ஒரு விசை அல்ல. ஆனால் அது மின்னோட்டம் நடைபெறுகையில் மின்னழுத்த வேறுபாட்டை பராமரிக்கிறது. மின்கடத்தியில் எலெக்ட்ரான்கள் நகர உதவிபுரியும் மின்திறனாகும். அதன் அலகு வோல்ட்.