உள்ளடக்கத்துக்குச் செல்

சமையல் நூல்/சட்னி/மல்லாட்டை(வேர்க்கடலை) சட்னி

விக்கிநூல்கள் இலிருந்து

தேவையான பொருட்கள் :

காய்ந்த வேர்கடலை - 250 கிராம் வர மிளகாய் (காய்ந்த மிளகாய்) - 3 (சுவைக்கேற்ப) புளி - சிறிய நெல்லிக்காய் அளவு உப்பு - சுவைக்கேற்ப


செய்முறை :

காய்ந்த வேர்கடலையை ஒரு சூடான வாணலியில் இட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். வேர்கடலை வாசம் நன்றாக வரும் வரை வறுக்கவும். தீய்த்துவிட வேண்டாம்

பிறகு வேர்கடலையின் தோல்நீக்கி, ஆறவைக்கவும்.

ஆறிய வேர்கடலை, மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து பொடியாக அரைக்கவும், தண்ணீர் விடவேண்டாம்.

பிறகு புளி கரைசலுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். கெட்டியான வேர்கடலை சட்னி தயார்.

தேவையான அளவு தண்ணீர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கரைத்து பரிமாறவும்.