சமையல் நூல்/சம்பல்

விக்கிநூல்கள் இல் இருந்து

தேங்காய்ப்பூ சம்பல்


  தேங்காய் சம்பல் - 1 
  தேங்காய்ப் பூ - ஒரு கப்
  கறித்தூள் - ஒரு தேக்கரண்டி அல்லது காரத்திற்கேற்ப
  எலுமிச்சை சாறு - 1 1/2 மேசைக்கரண்டி
  உப்பு - தேவையான அளவு
  வெங்காயம் - 2
 தேங்காய் சம்பல் - 2 
  தேங்காய்ப்பூ - ஒரு கப்
  பச்சை மிளகாய் - 3 அல்லது காரத்திற்கேற்ப
  வெங்காயம் - ஒன்று
  கறிவேப்பிலை - ஒரு கொத்து
  எலுமிச்சை சாறு - 1 1/2 மேசைக்கரண்டி
  உப்பு - தேவையான அளவு


வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கின வெங்காயம், தேங்காய் துருவல், கறித்தூள், உப்பு, சேர்த்து மேலே எலுமிச்சை சாறை ஊற்றி கைகளால் நன்கு பிசைந்து விடவும்.

சுவையான உடனடி சம்பல் ரெடி. இதை இலங்கையில் உடனடி சம்பல் என்றே சொல்வார்கள். இதை இடியப்பம், புட்டு, ரொட்டி, பாண், தோசை ஆகியவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும் பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் அல்லது ஃபுட் ப்ராசஸரில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

சுவையான தேங்காய்ப்பூ சம்பல் தயார். இதை இடியப்பம், புட்டு, ரொட்டி, தோசை ஆகியவற்றுடன் சாப்பிடலாம். விரும்பினால் ஒரு துண்டு இஞ்சி சேர்த்தும் அரைக்கலாம். சுவையாக இருக்கும்

"https://ta.wikibooks.org/w/index.php?title=சமையல்_நூல்/சம்பல்&oldid=15587" இருந்து மீள்விக்கப்பட்டது