சமையல் நூல்/போண்டா

விக்கிநூல்கள் இலிருந்து

மிளகு போண்டா

சேலம் மாவட்டத்தின் போண்டா

தேவையான பொருட்கள் (4 பேருக்கு) :

உளுந்து - 1 ஆழாக்கு மிளகு - 1 மேசை கரண்டி தேங்காய் - பொடியாக நறுக்கியது சிறிதளவு சமையல் எண்ணெய் - பொரிக்க உப்பு - தேவையான அளவு


செய்முறை :

உளுந்தை ஒரு மணி நேரம் வரை ஊற வைத்து, தண்ணீர் விடாமல் நன்றாக அரைத்து கொள்ளவும். மாவு நன்றாக உப்பி மிருதுவாக இருக்க வேண்டும்.

பிறகு, அரைத்த மாவில் உப்பு, மிளகு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காயவைத்து, காயும் எண்ணெயில் சிறு சிறு உருண்டைகளாக மாவை இட்டு பொறித்து எடுக்கவும்.


பின் குறிப்பு :

உளுந்தை தண்ணீர் விடாமல் அரைப்பது அவசியம். அப்பொழுதுதான் மாவு கெட்டியாக இருக்கும்.

சிறு உருண்டைகளாக இடவும் ஏனெனில் பொரிந்தவும் உருண்டைகள் இருமடங்காக கூடும்

கடாயில் எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் மாவை இடவும்

"https://ta.wikibooks.org/w/index.php?title=சமையல்_நூல்/போண்டா&oldid=17474" இலிருந்து மீள்விக்கப்பட்டது