சமையல் நூல்/மரக்கறி நாசி கொரெங்
Appearance
நாசி கொரெங் அல்லது பொரியல் சோறு என்பது ஒர் இந்தனேசிய உணவு ஆகும். இந்தனேசியாவில் தேசிய உணவாகக் கருதப்படும் இவ்வுணவு சி.என்.என் கருத்துக் கணிப்பின் படி உலகில் அதிகம் விரும்பி உண்ணப்படும் உணவுகளில் ஒன்றும் ஆகும். எளிமையாக பல வகைகளில் இவ்வுணவைச் சமைக்கலாம். பின்வரும் செய்முறை 2 பேருக்குப் போதுமான மரக்கறி நாசி கொரெங்.
தேவையான பொருட்கள்
[தொகு]- நீண்ட அரசிச் சோறு
கறிக் கூட்டுக்கு
[தொகு]- சிறு வெங்காயம் (shallot) - 4
- உள்ளி - 10 பற்கள்
- இஞ்சி - 2 சிறு துண்டுகள்
- தாய் சிகப்பு மிளகாய் - 5
- உப்பு
மரக்கறிகள்
[தொகு]விருப்பமான மரக்கறிகளைப் பயன்படுத்தலாம். மரக்கறிகளை கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- புரோக்கலி
- காளான்
- சோயா
- கேரட்
- அவரை
சுவைகூட்ட/அழகுபடுத்த
[தொகு]- வெங்காயத்தாள்
- சலறி
- பார்சிலி
- சிறு தக்காளி (துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
- முளைகட்டிய அவரை
- கறிவேப்பில்லை
சமைக்கும் போது
[தொகு]- நல்லெண்ணெய் / ஒலிவ் எண்ணெய்
- சோயா கூட்டுச்சாறு (soya sause)
- மஞ்சள்
- மிளகு
- பனங்கட்டிச் சீனி - 2 தே.க
செய்முறை
[தொகு]- சோறைப் பதமாகக் காச்சி வைத்துக் கொள்ளவும்.
- சிகப்பு மிளகாய், உள்ளி, சிறுவெங்காயம், இஞ்சி, உப்பு ஆகியவற்றை சேர்த்து சம்பல் போல அரைத்துக் கொள்ளவும்.
- சோயா பயன்படுத்துவதாயின், அதை சுடுநீரில் இட்டு பிழிந்து வைத்துக் கொள்ளவும். விரும்பினால் இளகிய சூட்டில் குறைந்த எண்ணெயில் பொரித்து எடுத்து வைக்கலாம்.
- குண்டு வாணலியை அடிப்பில் வைத்து நல்லெண்ணெயை அல்லது ஒலிவ் எண்ணெயைச் சேர்க்கவும். எண்ணெய் கொதித்து வரும் போது கறிவேப்பில்லையையும் பின்னர் அரைத்த கூட்டின் பெரும் பகுதியையும் இடவும்.
- கூட்டு பொன் நிறம் வரும் போது மரக்கறிகளையும் சோயாவையும் சேர்க்கவும். மரக்கறிகள் அவிந்து வந்த பின்னர் அதை இறக்கி ஒரு கோப்பையில் வைத்தக் கொள்ளவும்.
- பின்னர் மீண்டும் சிறு எண்ணெய் விட்டு, மிகுதி கூட்டைச் சேர்த்து பொன் நிறம் வந்த பின்னர் சோற்றைச் சேர்க்கவும். விரும்பின் சோற்றுக்கு மஞ்சளைச் சேர்க்கவும்.
- சோறு பொரிந்து இள மண் நிறம் வரும்போது எடுத்து வைத்த மரக்கறிகளைச் சேர்க்கவும். பின்னர் சோயாக் கூட்டுச்சாற்றைச் சேர்க்கவும்.
- சோறும் மரக்கறிகளும் சேர்ந்து பொரிந்து வந்தபின், வெங்காயத்தாள், சலறி, பார்சிலி, முளைகட்டிய அவரை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- சூட்டுடன் பரிமாறவும்.