சமையல் நூல்/மாங்காய் ஊறுகாய்
Appearance
தேவையான பொருட்கள்
[தொகு]- பெரிய ஊறுகாய் மாங்காய் - 1 கிலோ
- நல்லெண்ணெய் - 500 கிராம்
- கடுகு - 100 கிராம்
- வரமிளகாத்தூள் - 250 கிராம் அல்லது காரத்திற்கு ஏற்றவாறு
- கடுகு பொடி - 50 கிராம்
- உப்பு - தேவையான அளவு (சற்று கூடுதலாக இருந்தால் நல்லது)
செய்முறை
[தொகு]- பெரிய ஊறுகாய் மாங்காய்களை துருவி, பெரிய பாத்திரத்தில் உப்புடன்(தேவையான அளவுக்கு கொஞ்சம் கூடுதலாக சேர்க்கவும்) கலந்து வெய்யிலில் காயவைக்கவும்.
- 5 முதல் 6 நாட்கள் வரை காயவிடவும், பொதுவாக நீர் வற்றிஇருக்கும்வரை காய விடவேண்டும்
- பிறகு, ஒரு கடாய் அல்லது அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும்
- கடாயில் நல்லண்ணை விட்டு காய்ச்சவும்
- எண்ணெய் காய்ந்தவுடன் அதில் கடுகு சேர்க்கவும்
- பிறகு உப்பு-மாங்காய் கலவையை அதில் சேர்த்து தேவையான அளவு வரமிளகாத்தூள், அரைத்த வெந்தய பொடி(சிறிதளவு) சேர்த்து நன்கு கிளறவும்.
- பச்சை வாடை போகும் வரி கிளறி அடுப்பை அனைத்து, ஊறுகாயை நன்கு ஆறவைக்கவும்
- ஆறியதும் அதை ஒரு ஊறுகாய் ஜாடியில் அடைத்து உபயோகிக்கவும்