சமையல் நூல்/வட்டிலப்பம்
Appearance
தேவையான பொருட்கள்
[தொகு]- கருப்பட்டி - 500 கிராம்
- முட்டை - 6
- தேங்காய்ப் பால் - 1 கப் (இறுக்கமான பால்)
- ஏலப் பொடி - 1 தே.க
- பட்டர் - 1 தே.க
செய்முறை
[தொகு]- இறுக்கமான தேங்காய்ப் பாலில் கருப்பட்டியைச் சேர்த்துக் கரைத்து வடித்துக் கொள்ளவும்.
- முட்டையை நுரைவரக் கூடியதாக நன்கு அடிக்கவும்.
- பின்பு கருப்பட்டிக் கரைசலுடன் முட்டைக்கலவைச் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு அடிக்கவும்.
- ஏலப் பொடியைச் சேர்த்துக் கொண்ட பின்னர் பட்டர் பூசிய பாத்திரத்தில் ஊற்றி, பாத்திரத்தின் மேற்ப்பகுதியைப் பொலித்தீன் தாளினால் மூடிக்கட்டி 3/4 மணிநேரம் நீராவியில் அவித்தெடுக்கவும்.