உள்ளடக்கத்துக்குச் செல்

தீவினை அச்சம்

விக்கிநூல்கள் இலிருந்து

திருக்குறள் > இல்லறவியல்

« முன் பக்கம்: அன்புடைமை | திருக்குறள் » இல்லறவியல் » விருந்தோம்பல் | அடுத்த பக்கம்: இனியவை கூறல் »


201. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.
  • தீயோர் தீய செயல்களுக்கு அஞ்ச மாட்டார்கள். ஆனால் சிறப்பு நிறைந்தவர்கள் அவ்வாறு செய்ய பயப்படுவர்.


202. தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
  • தீய செயல்களால் தீமையே விளையும் ஆதலால் அவை தீயினும் கொடியதாக அஞ்சுவர்
203. அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
  • நம்மை வெறுத்தவருக்கும் தீமை செய்யாதிருப்பது நாம் அறிந்திருக்க வேண்டியவற்றுள் முதன்மையானது.
204. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.
  • மறந்தும் பிறருக்கு கேடு நினைக்கக் கூடாது அப்படிச் செய்தால் அறமே அவனுக்கு கேடு விளைவிக்கும்.


205. இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.
  • துணை எதுவும் இல்லாதவன் என்று ஒருவனுக்கு தீயவை செய்தால், தாமே இல்லாதவனாகும் நிலை ஏற்படும்.


206. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.
  • துன்பம் தன்னை வாட்டக் கூடாது என நினைப்பவன், பிறருக்கு தீங்கு செய்யக் கூடாது.


207. எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்
  • எந்தப் பகையானாலும் மீண்டு விடலாம், தீவினையான பகை உடன் வந்து கேடு விளைவிக்கும்.


208. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.
  • தீயவை செய்தவருக்கு நிழல் போன்ற விலகாத கேடு சூழும்.


209. தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
  • தன்னை நேசிப்பவன் என்றும் தீவினையை நெருங்குவதில்லை


210. அருன்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
  • மதி மயங்கி தீய செயல் செய்யாதவன் கெடுதல் அரிது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikibooks.org/w/index.php?title=தீவினை_அச்சம்&oldid=4891" இலிருந்து மீள்விக்கப்பட்டது