உள்ளடக்கத்துக்குச் செல்

நடுவுநிலைமை

விக்கிநூல்கள் இலிருந்து

« முன் பக்கம்: செய்ந்நன்றி அறிதல் | இல்லறவியல் | அடுத்த பக்கம்: அடக்கம் உடைமை »


111. தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
  • எவர் பக்கமும் பரிந்து நோக்காமல் இருத்தலே, நடுநிலையாளரின் தகுதி.
112. செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
  • அனைவரும் ஏற்கக் கூடிய வகையில் நீதி வழங்குபவன் ஆக்கி வைத்தவை, தலைமுறைக்கும் சேதமில்லாமல் நிலைத்திருக்கும்
113. நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.
  • நன்மையே ஆயினும் நடுநிலை தவறுவதால் அமையுமெனின், கைவிடல் வேண்டும்.
114. தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
  • ஒருவர் போற்றத் தக்கவரா என்பது அவருடைய செயல்களால் தீர்மானிக்கப் படும்.
115. கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
  • நல்லதும், கெட்டதும் கருதாமல் நடுநிலையுடன் இருத்தலே சான்றோருக்கு அழகு.
116. கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.
  • நடுநிலை தவறி செயல்பட்டால் கெடுதல் வரும் என்பதை ஒருவன் அறிந்திருத்தல் வேண்டும்
117. கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
  • நடுநிலையோடு வாழ்வதால் ஒருவன் வாழ்நிலை தாழ்ந்திருந்தாலும் உலகம் அவனை பழிக்காது
118. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.
  • வழக்கின் இருபுறமும் சீர்தூக்கிப் பார்த்து நடுநிலையுடன் செயல் படுதல் அறிஞர்க்கு அழகு
119. சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.
  • ஒருதலைப் படுதல் இல்லாமல் ஒருவன் சொல்லும் சொல் நீதியாக கொள்ளப்படும்.


120. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.
  • நீதி வழங்குபவர் அனைவருக்கும் அவரவர் துறையில் வல்லவர் போல் செயல் வேண்டும்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikibooks.org/w/index.php?title=நடுவுநிலைமை&oldid=5429" இலிருந்து மீள்விக்கப்பட்டது