பியூட்டிபுல் சூப்

விக்கிநூல்கள் இலிருந்து
பியூட்டிபுல் சூப் (Beautiful Soup - அழகுவடிச் சாறு)

அறிமுகம்[தொகு]

பைத்தானின் ('Monty Python=Surreal humor=அடிமன வெளிப்பாட்டிய நகைச்சுவை') நூலகக்கூறகங்களில்(Library modules) ஒன்றான 'பியூட்டிபுல் சூப்' (Beautiful Soup - அழகுவடிச் சாறு!), இணையப்பக்கக் கோப்புகளில் (HTML, XML) இருந்து, தரவுகளைத் தேவைக்கேற்றவாறு பிரித்தெடுக்கப் பயன்படுகிறது.

செயலாக்கம்[தொகு]

உங்களின் சொற்பிரிப்பியுடன் (parser), இக்கூறகநிரல் இணைந்து, இணையப்பக்கத் தரவுகளினுள், தேவைக்கேற்றபடி உட்செல்லவோ(navigating), தேடவோ, மாற்றவோ இயலும். இந்த அழகுவடிச் சாறின் திறனால், நிரலர்களின் நாட்கணக்கான அல்லது மணிகணக்கான, நிரல் எழுதும் நேரம் வெகுவாகக் குறைகிறது.

கீழேகூறப்படுகின்ற விளக்கவுரைகள், அழகுவடிச்சாறின் (Beautiful Soup4) நான்காம் பதிப்புக்குரியதாகும். அதிலும் முக்கியமான உட்கூறுகள் மட்டுமே விளக்கப்படுகின்றன. பொதுவாக இந்த உட்கூறுகளை, செயற்கூறுகள் (functions) என்கிறோம். ஒவ்வொரு செயற்கூறும், வெவ்வேறு விதமாக செயற்படும் இயல்புடையவை ஆகும். அவ்வேறுபாடுகளை அறிந்தால், நமது தரவுப் பிரித்தெடுக்கும் நோக்கம் எளிதாகும். இந்நோக்கத்தில் ஏதேனும் இடர்வரின், அதற்குரிய தீர்வுகளும் விளக்கப்படுகின்றன. பைத்தானின் இருவகைப் பதிப்புகளிலும் (பைத்தான் 2.7, பைத்தான் 3.2), இச்செயற்கூறுகள், எந்த வேறுபாடும் இல்லாமல், ஒரே விதமாகவே செயற்படும் சிறப்பியல்பைப் பெற்றிருக்கின்றன.

இதன் முந்தையப் பதிப்பான 'அழகுவடிச் சாறு 3', இனி இற்றையாகாது(updation). எனவே, இனி bs4 பதிப்பைப் பயன்படுத்தவும். bs3 எதிர் bs4 வேறுபாடுகளை, இப்பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.

மொழியாக்கம்[தொகு]

பின்வரும் மொழிகளில், இந்த ஆவணத்தின் மொழிபெயர்ப்புகளைக் காணலாம்.

  • ஆங்கில மொழியாக்கம்
  • சீன மொழியாக்கம்
  • கொரிய மொழியாக்கம்
  • யப்பானிய மொழியாக்கம்

உதவி பெறல்[தொகு]

இதன் பயன்பாட்டில் ஏதேனும் ஐயங்கள் தோன்றினாலோ, இடர்கள் இருந்தாலோ, இந்த கூகுள் குழுமத்தில் தெரிவித்து உதவிகளைப் பெறலாம். உங்களது இடர் சொற்பிரிப்பியுடன் இருந்தால், இடர் ஏற்படும் செயற்கூற்றின், கண்டறிதலின் விளைவைத் தவறாமல் குறிப்பிடவும்.

தொடக்கப் பயிற்சி[தொகு]

"https://ta.wikibooks.org/w/index.php?title=பியூட்டிபுல்_சூப்&oldid=15882" இலிருந்து மீள்விக்கப்பட்டது