பைத்தான்

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.[1]

என்கிறது வள்ளுவம். இவ்விரண்டினையும், விரைவாக கற்பதற்கு உதவுவது, தொழில் நுட்பம் ஆகும். அதில் தலையானது, கணினி மொழியாகும். கணிய மொழிகளில், பைத்தான் (Python)[2] நிரலாக்கம் கற்பதற்கு எளிமையானது. உலகின் பல நாடுகளில், பைத்தான் மொழியானது, இலட்சக்கணக்கானவர்களால் கற்கவும், கற்பிக்கவும் பயன்படுகிறது. இம்மொழியை, கூகுள், யாகூ,.. போன்ற பல வெற்றி அடைந்த வணிக நிறுவனங்களும் பயன்படுத்துகின்றன. [3] , [4] விக்கிமீடியத்திட்டங்களின் இணையப்பக்கங்களை உருவாக்குவதற்கும், மேம்படுத்துவதற்கும், தூய்மை படுத்துவதற்கும், பல கணிய மொழிகள் பயன்பட்டாலும், இம்மொழியே பெருமளவில் பயன்படுகிறது.

இது ஒரு பொதுகள / திறநிலை உரிமத்தில் (open source)இருக்கும் மென்பொருள் ஆகும். இதனால் இது எப்படி செயற்படுகிறது என்பதை வெளிப்படையாக தெரிவிக்கின்றனர். நமக்குத் தேவையான உதவிக் குறிப்புகளை, இணையத்திலேயே காணலாம். இணையத்தில் இல்லாதவற்றையும், ஐயங்களையும் கேட்டுப் பெற முடியும். இம்மொழி, மனித மொழியை எளிதாகக் கையாளக்கூடியது. குறிப்பாக, உரைகளை (பனுவல் = text) எளிதாகக் கையாளக்கூடிய திறன் மிக்கது ஆகும். மேலும், இம்மொழியைக் கொண்டு, ஒரு இணையதளத்தை, இணையத்தளச் செயலிகளை (app-s), தேடுபொறியை (search engine like google,yahoo...), கணிய விளையாட்டுக்களை வடிவமைக்க இயலும்.

வகைகள்[தொகு]

பைத்தானில் இருவகைகள் உள்ளன எனலாம். விக்கிமீடியத்திட்டங்களில் பைத்தானின் பயன்பாடுகைளயும் குறிப்பாக தமிழ் திட்டங்களில், இம்மொழியை எப்படி கையாளலாம் என்றும் நாம் ஒன்றிணைந்து கற்போம்.

பைத்தான்2[தொகு]

பைத்தான்3[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. முத்துகுறள் இணையப்பக்கம் உரைகள்
  2. https://www.python.org/
  3. https://statanalytica.com/blog/uses-of-python/
  4. [https://www.quora.com/Which-Internet-companies-use-Python

வார்ப்புரு:Reflist

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikibooks.org/w/index.php?title=பைத்தான்&oldid=17066" இருந்து மீள்விக்கப்பட்டது