புகழ்

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

திருக்குறள் > இல்லறவியல்

« முன் பக்கம்: அன்புடைமை | திருக்குறள் » இல்லறவியல் » விருந்தோம்பல் | அடுத்த பக்கம்: இனியவை கூறல் »231. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
 • ஈகை செய்வது புகழ்மிக்கவராய் வாழ்வது அது இல்லாமல் உயிர்வாழ்ந்து வேறுபயன் இல்லை


232. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.
 • இவ்வுலகத்தில் உரைப்பது எல்லாம், இரந்து கேட்கும் மக்களுக்கு அவர் வேண்டிய ஒன்றை கொடுக்கும் ஈகைகுணம் உள்ளவர்க்கு ::*சேரும் புகழாகபோய்ச்சேரும். அதாவது இந்த உலகத்தில் பெருமையாய் பேசும் எல்லாப்புகழும் ஈகைக்குணம் கொண்டோரைப்போய்ச் சேரும்.


233. ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.
 • உலகத்தில் இணையில்லாது ஓங்கிய புகழைத்தவிர அழியாது நிலைத்து நிற்பது வேறொன்றுமில்லை.


234. நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.
 • நிலத்தில்(உலகத்தின்) எல்லைவரை அல்லது இவ்வுலகத்தில் வாழ்வதற்குள்ள எல்லைகளுக்குள் புகழத்தக்க செயலை ஆற்றியவனை விட புலவரை(ஞானியரை) போற்றாது தெய்வங்களின் உலகம்.


235. நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.
 • வித்தகரைத்தவிர வேறுயாருக்கும் கைவரப்பெறாது எதுவென்றால் புகழுடம்புக்கு பெருக்கமும், புற உடம்பிற்கு வறுமையும் சேர்ந்து ::*இறந்தபின் அதிகமாகும் புகழ்.
 • சங்கு போல தன் நிலை குன்றினாலும் பெருமை மிகுந்து, இறந்தபின்னும் புகழுடயவராய் வாழ்தலும் வித்தகர்கள் தவிர வேறு யாருக்கும் அரிது.


236. தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
 • தோன்றினால் (புகழோடு) புகழ்பெறத்தக்க குணமுடையவனாய் தோன்றவேண்டும் அப்படி இல்லாதவர் தோன்றாமல் போவதே நல்லது.


237. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்?
 • புகழ் உண்டாக வாழமுடியாதவர் தன்னை இகழ்வாரை நோவது ஏன். தன்னைத்தானே அல்லவோ நோகவேண்டும்?


238. வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.
 • புகழுடைய வாழ்க்கை வாழ்ந்திராவிட்டால் இவ்வுலகத்தார் வசையாக வாழ்ந்ததாகவே கருதுவர்


239. வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.
 • புகழில்லாத மனிதரை தாங்கிய நிலமானது (பழியில்லாத) வளம் குன்றும்.


240. வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.
 • வாழுபவர் என்று யாரைகூறலாமென்றால் வசைபெறாமல் வாழ்பவரே. புகழிழந்து வாழ்வோரெல்லாம் வாழாதவர்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikibooks.org/w/index.php?title=புகழ்&oldid=4895" இருந்து மீள்விக்கப்பட்டது