பூனைக்குடும்ப விலங்குகள்/சிங்கம்

விக்கிநூல்கள் இலிருந்து


சிங்கங்கள் ஆப்பிரிக்க காட்டின் பிரதானமான அடையாளங்கள் ஆகும் .ஆப்பிரிக்காவில் அவற்றின் பலத்துக்காகவும் அழகுக்காகவும் நீண்ட காலமாக மரியாதை செய்யப்பட்டு வருகின்றன.பெரிய கூட்டங்களாக வாழும் ஒரேயொரு பூனைப்பேரின விலங்கும் சிங்கம் மட்டுமே ஆகும்.மேலும் அதிக சத்தமாக கர்ச்சிக்கும் பூனைப்பேரின விலங்கும் இதுவே .அதன் கர்ச்சிப்பு 5 மைல்கள் வரை கேட்க்கும் !

சிங்கங்கள் எங்கே வாழ்கின்றன ?[தொகு]

சிங்கங்கள் வாழும் இடங்கள் பச்சை நிறமூட்டப்படுள்ளது.

காடுகளின் ராஜா என்று சிங்கம் அழைக்கப்பட்டாலும் அது உண்மையில் காடுகளில் வசிப்பதில்லை . சமதரையான சவானா புல்வெளிகளிலே அவை வாழ்கின்றன .சவானாவில் அவை குறிப்பிட்ட ,விரும்பி வாழும் இடங்களை கொண்டுள்ளன .பண்டைய காலத்தில் ஏறத்தாழ எல்லா கண்டங்களிலும் சிங்கங்கள் வாழ்வை கொண்டிருந்தன .இன்று பெரும்பாலும் மத்திய மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவிலேயே காணப்படுகின்றன .ஆசியா கண்டத்தில் இந்தியாவிலுள்ள கிர் தேசிய பூங்காவில் மட்டும் சிறிய அளவில் காணப்படுகின்றன.மக்கள் இன்று விலங்குகளின் ராஜாவாக சிங்கங்களை கருதுகின்றனர் .

சிங்கங்கள் பார்ப்பதற்கு எப்படி இருக்கும்[தொகு]

ஒரு பெண்சிங்கம்

சிங்கங்கள் மஞ்சள்ப்பழுப்பு நிற உரோமத்தை கொண்டுள்ளன .அவை 10 அடி (3 மீற்றர் ) நீளம் வரையும், 4 அடி (1.2 மீற்றர் ) உயரம் வரையும் வளர்கின்றன .ஆண்சிங்கங்கள் பெண்சிங்கங்களை விட எடை கூடியவை.ஆண்சிங்கங்கள் 5 மனிதர்களின் எடையை அல்லது சுமார் 550 பௌவுண்ட் (250 கிலோகிராம் ) எடையை கொண்டிருக்கும் . ஒல்லியான பெண்சிங்கம் ஒன்றே சுமார் 400 பௌவுண்ட் (180 கிலோகிராம் ) எடையை கொண்டிருக்கும் .

ஆண்சிங்கத்தை அதனுடைய பிடரி முடியை வைத்து இனங்காண முடியும்.பிடரி முடிதலையை சுற்றியும் கீழாகவும் இருக்கும். சில சிங்கங்களுக்கு பிடரிமுடி வயிற்றுப்பகுதி வரை பரந்து காணப்படும்.ஆண் பெண்ணை தோற்றத்தில் எளிதில் வேறுபடுத்தக்கூடிய உருவ வேற்றுமைகள் சிங்கங்களை போல ஏனைய பூனைப்பேரின விலங்குகளில் காணப்படுவதில்லை.