நிரலாக்கம் அறிமுகம்/உலகே வணக்கம்

விக்கிநூல்கள் இலிருந்து

"உலகே வணக்கம்" என்பது உலகே வணக்கம் ("Hello World") என்று திரையில் அல்லது எதாவது ஒரு வெளியீட்டுக் கருவியில் அச்சிடும் ஒரு சிறிய நிரல் ஆகும். நிரலாக்க மொழியில் எழுதக் கூடிய மிக எளிமையான நிரல்களில் இதுவொன்றாகும். ஆகையால் ஒரு நிரல் மொழியின் தொடரியலை புதிய மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த இந்த நிரல் மரபுவழியாகப் பயன்படுத்தப்படுகிறது. நிரலாக்கம் செய்யத் தேவையான பணிச் சூழல் சரியாக நிறுவப்பட்டுள்ளதா என்று பரிசோதிக்கவும் இந்த நிரல் பயன்படுகிறது.

மொழிகள் வாரியாக[தொகு]

சி++[தொகு]

#include <iostream>
using namespace std;

int main (){
  cout << "உலகே வணக்கம்!";
  return 0;
}

யாவா[தொகு]

public class HelloWorldApp {
    public static void main(String[] args) {
        System.out.println("உலகே வணக்கம்");
    }
}

பி.எச்.பி[தொகு]

<?php
print "உலகே வணக்கம்!";
?>

பெர்ள்[தொகு]

#!/usr/bin/perl
print "உலகே வணக்கம்!";

அசுகல்[தொகு]

main = putStrLn "உலகே வணக்கம்!"

பைத்தான்[தொகு]

print('உலகே வணக்கம்')

எழில்[தொகு]

எழில் என்ற நிரல் மொழி [| எழில் (Ezhil)], தமிழில் எழுதும்வகையில் உருவாக்கப்பட்டுள்ள நிரலாக்க மொழியாகும். இதில் தமிழ் கலைச் சொற்களைக் கொண்டே நிரல்கள் எழுத முடியும். இது இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஒரு நிரல் மொழியாகும். இம்மொழி இன்னோர் பிரபல மொழியாகிய பைத்தானு(Python)டன் ஒத்து இயங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. பைத்தானின் நிரலகங்களைப் பயன்படுத்தி இயங்கும் இந்த மொழியில், ஆங்கிலத்திலும் நிரல்களை எழுதமுடியும். எழில் பற்றிய நுல்கள் : தமிழில்_நிரல்_எழுத_–_எழில்_தமிழ்_நிரலாக்க_மொழி

# எழில் தமிழ் நிரலாக்க மொழி உதாரணம்
 
பதிப்பி "அகிலத்துக்கு வணக்கம்!"
பதிப்பி "******* வருகைக்கு நன்றி! *******"