பொருள் நோக்கு நிரலாக்கம்/கட்டுநர்

விக்கிநூல்கள் இலிருந்து

கட்டுநர் (constructor) என்பது ஒரு பொருள் உருவாக்கப்படும் போது கூப்பிடப்படும் ஒரு சிறப்புச் செயலி ஆகும். இது பொருளைப் பயன்படுத்ததக்கவாறு ஆய்த்தங்களைச் செய்யும். பொதுவாக இது காரணிகளை உள்ளெடுத்து, பொருளுக்கு தேவைப்படும் பண்புகளை இடும்.

வகுப்புக்கும் கட்டுநர் செயலிக்கும் ஒரே பெயரே அமையும். அனேக மொழிகளில் கட்டுநர் எதையும் திருப்பி பதிலாக அனுப்பாது. பல மொழிகளில் ஒரு வகுப்பை உருவாக்கும் போது கட்டுநர் உருவாக்கப்படாவிட்டாலும் இயல்பாக (by default) ஒரு கட்டுநர் உருவாக்கப்படும்.

எடுத்துக் காட்டுக்கள்[தொகு]

யாவா[தொகு]

நாம் முன்னர் பார்த்த மாணவர் வகுப்பு எடுத்துக்காட்டில் public மாணவர் என்ற சிறப்புச் செயலி கட்டுநர் ஆகும். இது இரு காராணிகளை உள்ளெடுத்து பண்புகளில் இடுகிறது.

package student;

public class ணவர {
	// பண்புகள்/மாறிகள்
	protected int ணவர_எண;
	protected String யர;
	
	// கட்டுநர்
	public ணவர(int ணவர_எண, String யர){
		this.ணவர_எண = ணவர_எண;
		this.யர = யர;
	}
}