உள்ளடக்கத்துக்குச் செல்

பொருள் நோக்கு நிரலாக்கம்/செயலி மிகைப்பாரமேற்றல்

விக்கிநூல்கள் இலிருந்து

செயலி மிகைப்பாராமேற்றல் (Method Overloading) என்பது ஒரே பெயர் உள்ள ஆனால் வேறு செயலிக் கையெழுத்துக்கள் கொண்ட செயலிகளை உருவாக்குதல் ஆகும். செயலிக் கையெழுத்து என்பது பெயர், உள்ளீட்டுத் தரவு இனம், உள்ளீடுகளின் எண்ணிக்கை, திரும்பும் இனம் ஆகியவற்றால் ஆனது. ஒரே பெயருடன் ஆனால் வேறு கையெழுத்துக்களுடன் ஒரே மாதிரி பல செயலிகளை உருவாக்குவது பல சந்தர்ப்பங்களில் மிகவும் உதவியாக அமைகிறது. குறிப்பாக கட்டுநர் செயலிகளின் போது மிகைப்பாரமேற்றல் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டுக்கள்

[தொகு]

யாவா

[தொகு]
    public Result send(String i_url, byte[] i_entity) throws IOException
    {
        HTTPSender request = new HTTPSender(UPDATE, i_url, null, i_entity);
        return send(request);
    }
    
    public Result send(String i_url, File i_file) throws IOException
    {
        HTTPSender request = new HTTPSender(UPDATE, i_url, null, i_file);
        return send(request);
    }
    
    public Response send(String i_url, InputStream i_stream) throws IOException
    {
        HTTPSender request = new HTTPSender(UPDATE, i_url, null, i_stream);
        return send(request);
    }
    
    public Response send(String i_url, String i_entity) throws IOException
    {
        HTTPSender request = new HTTPSender(UPDATE, i_url, null, i_entity);
        return send(request);
    }