உள்ளடக்கத்துக்குச் செல்

பொருள் நோக்கு நிரலாக்கம்/நுண்புல வகுப்பு

விக்கிநூல்கள் இலிருந்து

நுண்புல வகுப்பு (abstract class) என்பது பொருள் உருவாக்கப் நேரடியாகப் பயன்படாடத, பெரும்பாலும் அடித்தள வகுப்புபை உருவாக்கப் (base classes) பயன்படும் வகுப்பு ஆகும். இதன் செயலிகள் சில நிறைவேற்றப்பட்டு இருக்கும் சில உள்வகுப்புகள் நிறைவேற்றுமாறு விடப்பட்டு இருக்கும்.

நுண்புல வகுப்பைப் பயன்படுத்தி உள்வகுப்புக்களை உருவாக்கலாம். பல மொழிகளில் உள்வகுப்புகள் ஒரு நுண்புல வகுப்பில் இருந்து மட்டுமே மரபியல்புகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

எங்கு பயன்படுத்துவது[தொகு]

அடுத்தள வகுப்பில் மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்த்தால், அதே வேளை சில செயலிகளை அல்லது பண்புகளை எல்லா உள்வகுப்புகளுக்கும் இருக்குமாறு செய்ய வேண்டும் ஆயின் நுண்புல வகுப்பு நன்று. எங்கும் 'இது ஒரு' (IS-A) உறவு வருகிறதோ, அங்கு நுண்புல வகுப்பைப் பயன்படுத்தலாம்.

வெளி இணைப்புகள்[தொகு]