பொருள் நோக்கு நிரலாக்கம்/பண்புகள்

விக்கிநூல்கள் இலிருந்து

ஒரு வகுப்பு பண்புகளையும் செயலிகளையும் கொண்டிருக்கிறது. ஒரு வகுப்பு வரையறை செய்யும் பொருளைப் பற்றிய தகவல்களை பண்புகள் ஊடாக வகுப்பு வைத்திருக்கும். எடுத்துக்காட்டாக மாணவர் என்ற வகுப்பின் பண்புகளாக அவரின் பெயர், வயது, பால், முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி போன்ற தகவல்கள் இடம்பெறலாம். பண்புகள் பொதுவாக முழுஎண், சரம் போன்ற அடிப்படையான தரவு இனங்களால் ஆனவை. ஒரு பொருளின் நிலை (state) பற்றிய தகவல்களும் பண்புகளில் இடப்படும்.

சில மொழிகள் பண்புகள் (Properties) தரவிடங்கள் (Fields) என்று வேறுபடுத்தும். பண்புகள் என்று அவை வரையை செய்பவற்றை பெறவும் இடவும் என செயலிகளை அவை தானவே உருவாக்கித் தரும். பிற மொழிகளில் பெறுநர்கள் இடுநர்கள் பயன்படுத்த வேண்டும். பண்புகள் தரவிடங்கள் என்று வேறுபடுத்தும் மொழிகளில் தரவிடங்களுக்கு பெறுநர்களும் இடுநர்களுக்கும் தாமாக உருவாக்கப்படா.

எடுத்துக் காட்டுக்கள்[தொகு]

யாவா[தொகு]

நாம் முன்னர் பார்த்த மாணவர் வகுப்பு எடுத்துக்காட்டில் மாணவர்_எண் மற்றும் பெயர் ஆகியன பண்புகள் ஆகும். மாணவர்_எண் முழுஎண் தரவுஇனம் ஆகும். பெயர் சரம் தரவுஇனம் ஆகும்.

package student;

public class ணவர {
	// பண்புகள்/மாறிகள்
	protected int ணவர_எண;
	protected String யர;
}