உள்ளடக்கத்துக்குச் செல்

பொருள் நோக்கு நிரலாக்கம்/மரபியல்பாக்கம்

விக்கிநூல்கள் இலிருந்து

மரபியல்பாக்கம் (inheritance) என்பது ஒர் அடிப்படை வகுப்பில் இருந்து அதே வகை இன்னொமொரு வகுப்பை உருவாக்கப் பயன்படும் உத்தி ஆகும். ஒரு பொருளுக்கும் இன்னுமொரு பொருளுக்கும் இது ஒரு (ஆங்கிலத்தில் is a) உறவு இருக்கும் பட்சத்தில் மரபியல்பாக்கம் ஊடாக புது வகுப்பை உருவாக்குவது பொருத்தம் ஆகும். இதனை வகுப்புகளுக்கு இடையே பெற்றோர் பிள்ளை உறவு உள்ளது என்றும் விபரிக்கலாம். பொருள் நோக்கு நிரலாக்கத்தின் முக்கிய நான்கு கூறுகளில் இதுவும் ஒன்றாகும். பெரும்பாலான மொழிகளில் extends என்ற சொல்லைப் பயன்படுத்தி மரபியல்பாக்கம் செய்வார்கள்.

எடுத்துக்காட்டுக்கள்

[தொகு]

யாவா

[தொகு]

நாம் முன்னர் பார்த்த மாணவர் என்ற வகுப்பில் இருந்து பட்டதாரி_மாணவர் என்ற ஒரு வகுப்பை மரபியல்பாக்கம் ஊடாக பின்வருமாறு உருவாக்கலாம்.

package student;

public class படடதி_மணவர extends ணவர {
	// பண்புகள்/மாறிகள்
	private String ளர;
	private String ஆய_த;
	
	// கட்டுநர்
	படடதி_மணவர(int ணவர_எண, String யர, String ஆய_த){
		super(ணவர_எண, யர);
		this.ஆய_த = ஆய_த;
	}
	public void ளர_இட(String ளர){
		this.ளர = ளர;
	}
	
	public void ஆய_சமரி(String ஆய_தல){
		System.out.println(this.ஆய_த + " துறையில் முதுநிலைப் பட்டயம் படிக்கும் " + this.யர + 
                             " தனது பட்டம் பெறுவதற்கான ஆராச்சியை " + ஆய_தல + " என்ற தலைப்பில் மேற்கொள்ளவுள்ளார்.");		
	}
}