மாங்கோடிபி/மாங்கோடிபியைச் செயல்படுத்துதல்
Appearance
மாங்கோடிபிற்க்கான தரவு அடைவை அமைத்தல்
[தொகு]மாங்கோடிபி அதன் கோப்புகளை சேமிக்க ஒரு தரவு கோப்புறை அல்லது அடைவு தேவைப்படுகிறது.மாங்கோடிபியின் இயல்பிருப்பு அடைவு c:\data\db ஆகும். இதனை உருவாக்க பின் c:\ அடைவிற்கு சென்று பின்வரும் வழிகளை பின்பற்றவும்:
md data
md data\db
Mongod.exe -dbpath விருப்பத்தை பயன்படுத்தி தரவு கோப்புகளை வேறொரு மாற்று பாதையில் இருக்குமாறு குறிப்பிட முடியும். எடுத்துக்காட்டாக:
C:\mongodb\bin\mongod.exe --dbpath d:\test\mongodb\data
மாங்கோடிபியை தொடங்குதல்
[தொகு]மாங்கோடிபியை தொடங்குவதற்கு கட்டளை துண்டியிலிருந்து பின்வரும் கட்டளையை செயல்படுத்தவும்:
C:\mongodb\bin\mongod.exe
இது முக்கிய மாங்கோடிபி தரவுத்தள செயல்முறையை ஆரம்பிக்கும். "waiting for connections" என்ற பணியக வெளியீடு(console output) mongod.exe செயல்முறை வெற்றிகரமாக இயங்குகிறது என்பதை குறிக்கிறது.