மாங்கோடிபி/மாங்கோடிபி என்றால் என்ன?

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

மாங்கோடிபி என்பது ஒரு திறமூல தரவுத்தளம் ஆகும். இது ஒரு கட்டமைப்பில்லாத வினவு மொழி வகையை சார்ந்தது. இது உயர் செயல்திறன்(High Performance), தடைகளின்றி கிடைத்தல்(High Availability) மற்றும் தானியங்கி முறையில்(Automatic Scalability) விரித்து இயங்கும் தன்மைகளை கொண்டது.

கட்டமைப்புள்ள வினவு மொழிக்கும் மாங்கோடிபிக்கும் உள்ள சொல்லியல் தொடர்புகள்[தொகு]

கட்டமைப்புள்ள வினவு மொழி vs மாங்கோடிபி
கட்டமைப்புள்ள வினவு மொழி(SQL Terms/Concepts) மாங்கோடிபி (MongoDb Terms/Concepts)
தரவுத்தளம் (Database) தரவுத்தளம் (Database)
அட்டவணை (table) தொகுப்பு (Collection)
கிடைவரிசை (row) ஆவணம் (Document)
நிரல் (column) புலன் (field)

ஆவணத் தரவுத்தளம்[தொகு]

இது ஒரு ஆவணத் தரவுத்தளம் ஆகும். இதன் தரவுக் கட்டமைப்பு புலம் மற்றும் அதன் மதிப்பையும் கொண்ட இணைகளாக இருக்கும். மாங்கோடிபி ஆவணங்கள் ஜசோன்(JSON) பொருட்களை ஒத்து இருக்கும். புலத்தில் இருக்கும் மதிப்புகள் ஒரு ஆவணமாகவோ, அல்லது வரிசைகலாகவோ அல்லது ஆவனங்களின் வரிசையாகவோ இருக்கலாம்.

ஆவணத் தரவுத்தளம் எடுத்துக்காட்டு[தொகு]

{
name:"சிவா",
age:27,
Status:"A",
groups: ["news","sports","tech"]
}