விக்கிநூல்கள்:ஆலமரத்தடி/தொகுப்பு02
விக்கி நூல்களுக்கு ஏதேனும் வலைக்குழுமம் இருக்கிறதா?
[தொகு]அன்புடையீர்,
நமது விக்கி நூல்களுக்கு என்று ஏதேனும் தனி வலைக் குழுமம் இருக்கிறதா? விக்கிநூல்கள் அன்பர்கள் தெளிவுபடுத்துங்களேன்? அன்புடன் -Pitchaimuthu2050 08:45, 31 ஜனவரி 2012 (UTC)
ஊடகப் போட்டி துவக்கம்
[தொகு]தமிழ் விக்கி ஊடகப் போட்டி, இன்று (நவம்பர் 15) முதல் துவங்குகிறது. போட்டிக்கான வலைவாசல் - w:வலைவாசல்:ஊடகப் போட்டி. அனைவரும் பங்கு கொண்டு தங்கள் ஆக்கிய ஊடகக் கோப்புகளைப் பதிவேற்றும்படி வேண்டுகிறேன். மேலும் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினாரிடம் இது பற்றிக் கூறி பரப்புரை உதவி புரியவும் வேண்டுகிறேன். உங்களுடைய ஃபேஸ்புக், டிவிட்டர், வலைப்பதிவுகள் போன்றவற்றில் இது குறித்து செய்தி இட்டு உதவுங்கள். வலைப்பதிவில் இடவும் மின்னஞ்சலில் அனுப்பவும், அச்செடுத்து விநியோகிக்கவும் ஏற்ற ஒரு துண்டறிக்கை இங்கு - w:படிமம்:OnePageContestGuideUpdated.jpg - உள்ளது. இதனை பயன்படுத்தி பரப்புரை செய்ய வேண்டுகிறேன்.
போட்டிக்கான ஃபேஸ்புக் தளம் - இதனைப் உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ள -
தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல்
[தொகு]தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் அணி தமிழ் விக்கியூடகங்களில் (விக்கிப்பீடியா, விக்சனரி, செய்திகள், மூலம், நூல்கள், மேற்கோள்) ஒர் பரந்த உரையாடலை மேற்கொண்டு ஒரு திறனான வியூகத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்படுகிறது. இதில் தமிழ் விக்கியூடகங்கள் மீது அக்கறை உள்ள யாரும் கலந்து கொள்ளலாம். இந்தப் பணிக்கு கூடிய நேரம் அல்லது ஆற்றல் வழங்கக்கூடியவர்கள் செயற்பாட்டுக் குழுவில் சேர்ந்துகொள்ள வேண்டுகிறோம். இதன் நோக்கங்கள் பின்வருமாறு:
- அக்கறை உள்ள அனைவரையும், அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கி, மதிப்பீடு செய்து ஒரு திறனான 2012, மற்றும் 2015 வியூகம் ஒன்றை உருவாக்கல்.
- வியூகத்தை நிறைவேற்ற உதவும் செயற்திட்டங்களை வரையறை செய்தல்.
- வியூகத்தை, அதன் செயற்திட்டங்களை நிறைவேற்ற தேவையான வளங்களைத் திரட்டல்.
- வியூக நிறைவேற்றாலைக் கண்காணித்து, பின்னூட்டுகள் பெற்று, தகுந்த மாற்றங்களைச் செய்துகொள்ளல்.
மேலும் தகவல்களுக்கு: தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் அணி
தமிழ் விக்கியூடக திட்டமிடலிலின் முதல் கட்டமாக ஒரு கேள்விக் கொத்தை தயாரித்து, பரந்த பயனர்களிக் கருத்துகளைப் பெறப்படவுள்ளது. அதற்கான கேள்விகளைப் கீழே பரிந்துரையுங்கள். அதி கூடியதாக 20-25 கேள்விகளை எடுத்துக் கொள்ளப்படும்.
மேலதிக தகவல்களுக்கு:தமிழ் விக்கியூடக கருத்தாய்வுக் கேள்விக் கொத்து (வரைவு)
--Natkeeran 19:55, 1 ஜனவரி 2012 (UTC)
ஒரு வேண்டுகோள்
[தொகு]தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதல் பங்களிப்பாளர்களை ஈர்க்கும் முகமாக, விக்கிநூல்களின் தள அறிவிப்பில் விக்கிப்பீடியா:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள் இடலாமா?. வாரம் ஒரு அறிவிப்பாக ஒன்பது வாரங்களுக்கு இந்த அறிவிப்பு இடம் பெறும். தமிழ் விக்கிமீடியாவில் உள்ள அனைத்துத் திட்டங்களிலும் ஒன்றுக்கு ஒன்று நற்செய்கைகளைப் பரிமாறிக் கொள்வதும் உதவுவதுமே இதன் நோக்கம். நன்றி--Ravidreams 09:55, 21 பெப்ரவரி 2012 (UTC)
தமிழ் விக்கி ஊடகப் போட்டி முடிவுகள்
[தொகு]தமிழ் விக்கி ஊடகப் போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன.--சோடாபாட்டில்உரையாடுக 19:45, 29 மார்ச் 2012 (UTC)
பக்கங்களை எப்படி நகர்த்துவது
[தொகு]நான் புதுபதிகை செய்ந்தபின்னரும் நகர்த்தல் உரிமை இல்லை. நகர்த்தல் உரிமையை எவ்வாறு பெறுவது ?? --Natkeeran (பேச்சு) 17:32, 16 ஜூன் 2012 (UTC)
நிர்வாகிகள் கவனத்துக்கு
[தொகு]- தற்போதைய நிகழ்வுகள் பகுதியை நீக்கவும். இதனை பராமரிப்பது சிரமானது. இதற்குப் பதிலாக பயனர்கள் விக்கிசெய்திகளையே பயன்படுத்திக் கொள்ளலாம்.
- ஒரு புத்தகம் உருவாக்கு என்று இடது பக்க இணைப்பு ஒன்றில் உள்ளது. அது ஒரு நூலை உருவாக்கவும் என்று மாற்றுவது நன்று. --Natkeeran (பேச்சு) 01:05, 17 ஜூன் 2012 (UTC)
சிறுவர்விக்கி பெயர்வெளி தேவை
[தொகு]சிறுவர் நூல்களை சிறுவர்விக்கி என்ற பெயர்வெளியில் உருவாக்குவதே சரி. அப்படியே ஆங்கிய விக்கியில் செய்கிறார்கள். தயந்து கவனிக்க. --Natkeeran (பேச்சு) 03:53, 18 ஜூன் 2012 (UTC)
எனக்கு நகர்த்தல் பொத்தான் வேலை செய்யவில்லை, வேறு யாருக்காவது இப்படி உள்ளதா ??
[தொகு]எனக்கு நகர்த்தல் பொத்தான் வேலை செய்யவில்லை, வேறு யாருக்காவது இப்படி உள்ளதா ?? --Natkeeran (பேச்சு) 23:52, 28 ஜூன் 2012 (UTC)
- எனக்கு அப்படி இல்லையே. --இராஜ்குமார் (பேச்சு) 19:50, 29 ஜூன் 2012 (UTC)
மருத்துவ வினா-விடைகள்
[தொகு]உடல்நலத்தில் ஆர்வமுள்ளோருக்குப் பயன்படும் வகையிலான வினா-விடை நடையில் ஒரு விக்கி நூல் எழுதலாமா என நினைக்கிறேன். இது பாடநூல் ஆகாதபடியால் விக்கிநூல்களில் இடம்பெறும் தகுதி உண்டா என்று தெளிவுபடுத்த வேண்டுகிறேன். நன்றி !--Karthi.dr (பேச்சு) 14:27, 2 நவம்பர் 2012 (UTC)
- நிச்சியமாக. பாடநூல் வடிவத்தில்தான் அமைய வேண்டும் என்று இல்லை. பாடங்களுக்குப் பயன்படும் என்றபடியால் நிச்சியம் எழுதலாம் என்றே நான் கருதுகிறேன். --Natkeeran (பேச்சு) 15:44, 2 நவம்பர் 2012 (UTC)