உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிநூல்கள்:பயிற்சி (கவனிக்க)

விக்கிநூல்கள் இலிருந்து
வரவேற்பு   தொகுத்தல்   வடிவமைப்பு   உள்ளிணைப்புகள்   வெளியிணைப்புகள்   பேச்சுப்பக்கம்   கவனம் கொள்க   பதிகை   மறுஆய்வு    

விக்கிப்பீடியாவில் தொகுக்கும்போது கவனம் கொள்ள வேண்டியவை சிலவற்றை இங்குக் காண்போம்.

தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள்

[தொகு]

உள்ளடக்கம்

[தொகு]

விக்கிப்பீடியா என்பது ஒரு தொகுக்கக்கூடிய கலைக்களஞ்சியம்ஆகும். எனவே, கட்டுரைகள் 'கலைக்களஞ்சிய நடை'யில், (வலைப்பதிவுகள், உரையாடல் மற்றும் வழக்குத்தமிழ் நடைகளில் அல்லாது) எழுதப்படுதல் தேவை. கட்டுரையின் பொருள், எதைப்பற்றி இருக்க வேண்டும் என விக்கிப்பீடியாவில் எப்போதும் விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும். நம்மில் சிலர், உலகின் அனைத்து நபர்களைப்பற்றியும், இடங்களைப் பற்றியும், நிறுவனங்களைப் பற்றியும் எழுத விரும்புவோம். கலைக்களஞ்சியத்திற்கில்லாத சில ஆக்கங்கள், விக்கிப்பீடியாவின் பிற திட்டங்களுக்கு உகந்தவையாக இருக்கலாம்.

எந்தஒரு கட்டுரையானது, ஒரு சொல்லையோ, ஒரு சிறுசொற்றொடரையோ விளக்குவதுடன் நிற்குமேயானால் -அதனைக் கலைக்களஞ்சியக் கட்டுரையாக விரிவுபடுத்த இயலாதென்றால்- அதனை விக்சனரி திட்டத்திற்கு அனுப்பலாம்.

பொதுப்பரப்பில் கிடைக்கும் புத்தகத்தின் மூலஉரையை, அனைவரும் எளிதில்பெறுமாறு பதிப்பிக்க விரும்பினால் உங்கள் பங்களிப்பை மற்றொரு விக்கித்திட்டமான விக்கி மூலத்திற்கு அனுப்பலாம்.

வார்ப்புரு:விக்கி பிறதிட்டங்கள்

விக்கிப்பீடியாவானது புதிய ஆய்வுகள் நடத்தும் இடம்அன்று. — இதில் சக ஆய்வாளர்கள் உடன்படாத எந்த ஒரு கொள்கையையும் பதிப்பிக்க இயலாது. மேலும், இதுபற்றி அறிய இக்கையேடுகளையும் காண்க:

பயனர்கள் தங்களைப் பற்றியும், தங்கள் சாதனைகளைப் பற்றியும் எழுதுவதைத் தவிர்க்க வேண்டுகிறோம்.(உங்கள் சாதனைகள் குறிப்பிடத் தகுந்தவையாக இருந்தால், யாரேனும் ஒருவர் அதனைப்பற்றி எழுதுவார்.)

நடுநிலை நோக்கு

[தொகு]

நடுநிலைமைக்கொள்கை, விக்கிபீடியா தளம் மற்றும் தமிழ் விக்கிபீடியாவின் அடிப்படையான கொள்கைகளில் ஒன்று. "நடுநிலை நோக்கு" அனைத்து முக்கியப் பார்வைகளுக்கும், தகுந்த நியாயமான இடம் தரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அனைத்துப் பார்வைகளையும், எழுதுபவர் நோக்கில் மட்டும் காணாது எந்தவொரு பக்கச்சார்வுமின்றி கொடுக்கப்படவேண்டும். 'தகவல் களஞ்சிய'மாக இருக்க வேண்டுமேயன்றி, நியாயப்படுத்தும் நடைகூடாது. இதனால் அனைத்துக் கட்டுரைகளும் 100% "முன்சாய்வு" இல்லாதவை எனக் கூறவியலாது; ஏனெனில் எந்தவொரு விவாதத்திலும் அனைவரும் 'தங்கள் கூற்றே சரியானது' என எண்ணுவது உலகஇயல்பு.

கட்டுரைகளில் சான்றில்லாக் கருத்துகளை இடலாம், ஆனால் அவற்றை உண்மைத்தரவுகளாகக் கருத இடமின்றிக் 'கூற்றுகள்' என அழுத்தமாகக் குறிப்பிட வேண்டும்.அக்கூற்றினைச் சொன்னவர்களுக்கு அவற்றை உரிமையாக்குவது நல்ல வழக்கம். காட்டாக, "இச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு நம்புகின்றனர்..." அல்லது "இன்னார் கூற்றுப்படி.." எனக்குறிப்பது விரும்பத்தக்கது.

நீங்கள் சர்ச்சைகள் மிக்க, சமயம் மற்றும் அரசியல் போன்ற தளங்களில் கட்டுரை ஆக்குவதாக இருந்தால் நடுநிலை பற்றிய விக்கிப்பீடியா பக்கத்தை முதலில் படியுங்கள்.

சான்றுகள் தேவை

[தொகு]

எந்த ஒரு தகவலுக்கும் மேற்கோள் வலுச்சேர்க்கும். இருப்பினும் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடிய தகவல்கள், வாழும் நபர்களைப் பற்றிய செய்திகள், இலக்கங்களில் தரப்படும் தகவல்கள், நடையின் பொருட்டுச் சுருக்கமாக எழுதி, ஆனால் படிப்பவர்கள் மேலே ஆய்வு செய்யத்தக்க தகவல்கள் மற்றும் வேறொருவரின் கூற்றைக் குறிப்பிடும்பொழுது, வெளிச் சான்றுகளை மேற்கோள்களாகக் காட்டுதல் இன்றியமையாதது. அனைத்து ஆதாரங்களும் "மேற்கோள்கள்" என்று பெயரிடப்பட்ட பத்தியில் பட்டியலிடப்பட வேண்டும். கட்டுரையின் தகவல்களுக்குத் தொடர்புடைய, படிப்பவர்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய இணையத்தளங்களுக்கு "வெளியிணைப்புகள்" என்று பெயரிடப்பட்ட பத்தியில் பட்டியலிட வேண்டும். இதேபோல பயனுள்ள தகவல்கள் அடங்கிய தொடர்புடைய புத்தகங்கள் "மேலும் படிக்க"என்ற பத்தியில்,அவை ஏற்கெனவே மேற்கோள்களில் இடம் பெறாவிட்டால் மட்டுமே, பட்டியலிடலாம். நீங்கள் எழுதிவற்றை வாசகர்கள் சரிபார்த்துக் கொள்ளவும் மேலதிகத் தகவல்களைப் பெறவும் சான்றுகள் உதவுகின்றன.


காப்புரிமை

[தொகு]

அனுமதி பெறாத காப்புரிமை உள்ள ஆக்கங்களைச் சேர்க்க வேண்டாம். கட்டுரைகளில் தகவல்களைச் சேர்க்கும்போது, அவை உங்கள் சொற்களால் ஆனவையாக இருக்கட்டும். இணையத்தில் காணக்கிடைக்கும் அனைத்துத் தகவல்களும், குறிப்பிட்ட இணையத்தளம் தனியாக இதனை அறிவிக்காதவரை, காப்புரிமை உடையவை என்பதை மறக்காதீர்கள். ஆகையால் எந்த உரையையும் வெட்டி ஒட்டாதீர்கள். படிமங்களையும் பிற ஊடகக் கோப்புகளையும் எழுத்துமூலம் அனுமதி பெற்றே பாவியுங்கள்..

மேலும் தகவல் அறிய: காண்க விக்கிப்பீடியா:பதிப்புரிமை.

தமிழ்ப் பயன்பாடு

[தொகு]
ஒரு மொழியில் 'அடிப்படை அறிவு' என்பது, அந்த மொழியில் உள்ள எழுத்துக்களையும், சொற்களையும், அவற்றின் பொருளையும், வாக்கிய அமைப்புகளையும் தெரிந்திருப்பதே. மேலே குறிப்பிட்ட நான்கையும் உள்ளடக்கியது, ஒரு மொழியின் இலக்கணம். இந்த இலக்கணத்திற்கு அப்பாலும், உரைநடையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் உள்ளன. இந்த நெறிமுறைகளைப் பின்பற்றினால், எழுதுவது சீராகவும், கருத்து வெளிப்படுவது தெளிவாகவும் இருக்கும்.
1.சமசுகிருதமொழிச் சொற்களை எழுதவும், சில வேற்றுமொழி ஒலிப்புக்களைத் தமிழில் குறிக்கவும் சில 'கிரந்த' எழுத்துக்கள் வழக்கில் உள்ளன. அவற்றில் முக்கிய எழுத்துக்கள் , , , ஆகும். இவை தவிரக் கூட்டெழுத்துகளாகிய க்ஷ, ஸ்ரீ என்பனவும் பயன்பாட்டில் உள்ளன. தமிழ் விக்கிப்பீடியாவில், இயன்றவரை தமிழ் ஒலிப்புமுறைக்கு ஏற்பத் தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி எழுதப் பரிந்துரைக்கப்படுகிறது.
2. பிற மொழிச் சொற்களையும், ஆக்கங்களையும் தமிழாக்கம் செய்யும்போது கவனம் கொள்ள வேண்டியவற்றைக் கீழ்வரும் கையேடுகள் விவரிக்கின்றன:
3.தமிழ் எழுத்துவழக்கில் பெரும்பாலும் ஒரு சீர்தரம் உண்டு. எனினும், உலகில் பரந்து வாழும் தமிழர்களுக்கிடையே உச்சரிப்பில் வட்டாரவழக்கு வேறுபாடுகள் உண்டு. தமிழ் விக்கிப்பீடியாவில் அனைத்துத் தமிழர்களுக்கும் புரியும் எழுத்து வழக்கே பின்பற்றப்படுகிறது. இருப்பினும், வட்டாரவழக்குகள் சில சூழல்களில் பயன்படுத்தப்படுகின்றன.
  • ஆள், இடம் தொடர்பான பெயர்கள் வட்டார எழுத்துக்கூட்டலை பெரும்பாலும் தழுவுகிறது.
  • வட்டாரமொழி வழங்கும் கட்டுரைச் சூழலில், வட்டார எழுத்துக்கூட்டல்கள் பயன்படலாம்.
4. புதுப்பக்கங்களை உருவாக்கும்போது அவற்றிற்குப் பெயரிடல் மரபினை ஒட்டித் தலைப்பிடுக
தமிழ் விக்கிப்பீடியாவில் எவ்வாறு தமிழ்உரையும், அதன்நடையும் பயில வேண்டும் என்பதற்குக் காண்க:நடைக் கையேடு.

நடத்தை

[தொகு]

விக்கிப்பீடியாவில் நட்பானதும், திறந்த மனப்பாங்கும் கொண்ட சூழல் விரும்பப்படுகிறது. அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்; சூடான விவாதங்களும் நடைபெறலாம்; ஆனால், பங்களிப்பாளர்கள் பொதுவான குடிமைத்தன்மையை பேணுவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த ஒரு பக்கத்திலோ, பயனர் செயல்பாட்டிலோ பிழை கண்டால், அது எளிதில் உங்களால் திருத்தி அமைக்கக்கூடியதாய் இருந்தால், நீங்களே அதை முதலில் திருத்திவிடுங்கள். அதைத் திருத்துமாறு ஒரு குறிப்பைப் பதிப்பதை விட, இது பயனுள்ளதும் பிறபயனர்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதுமாகும். இப்பிழை ஓரிருமுறை மட்டுமே ஒருபயனரால், கவனக்குறைவு காரணமாகச் செய்யப்பட்டிருப்பின் அதைச் சுட்டிக்காட்டத் தேவையில்லை. பலரும் இப்பிழை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தால், தகுந்த உரையாடல் பக்கங்களில் தெரியப்படுத்துங்கள். ஒரே பயனர் அதேபிழையை பல முறை அறியாமல் செய்துவந்தால், அவரது பேச்சுப்பக்கத்தில் ஆலோசனை வழங்குங்கள்.

மேலும் தகவல்களுக்குப் பார்க்க விக்கி நற்பழக்கவழக்கங்கள்.

ஆக்கங்கள் உருவாக்கம்

[தொகு]

நீங்கள் இதுவரை பயின்றவற்றைக் கவனத்தில் இருத்தி, விக்கிப்பீடியாவிற்குப் பங்களிக்கத் துவங்குங்கள்.

எவ்வாறு கட்டுரை உருவாக்குவது என்பதற்குப் பார்க்க விக்கிப்பீடியா:புதிய பக்கத்தை உருவாக்குதல்.

கட்டுரைகளுக்கு மறுபெயரிடல்

[தொகு]

ஒரு கட்டுரையின் பெயர் சரியாக கொடுக்கப்படாதிருந்தால், அக்கட்டுரையின் உள்ளடக்கத்தை நகல் எடுத்து ஒட்டிப் புதியகட்டுரையை உருவாக்காதீர்கள் — அது முந்தைய தொகுத்தல் வரலாற்றினைப் புதிய கட்டுரையிலிருந்து பிரித்து விடுகிறது ( காப்புரிமை காரணங்களுக்காக அவற்றைப் பாதுகாப்பது தேவையாகும்). இதனால் ஒருபக்கத்தை வேறு பெயருக்கு நகர்த்துதல் விரும்பப்படுகிறது. இதனை உள்பதிகை செய்துள்ள பயனர்களே செய்ய இயலும். உங்கள் முதல்முயற்சியின்போது, நகர்த்துவதற்கான உதவிப்பக்கத்திலுள்ள எச்சரிக்கைகளைக் கவனமாகப் படியுங்கள். ஒரு பக்கத்தை நகர்த்தும்முன், கவனம் கொள்ளவேண்டியவை நிறைய உள்ளன. ஏதேனும் "பக்கவழி நெறிப்படுத்தல்" பக்கம் நகர்த்தவேண்டியிருந்தால் கூடுதல் கவனம் தேவை. பார்க்க: பக்கவழி நெறிப்படுத்தல்.

மேலும் தகவல்களுக்கு, பார்க்க எவ்வாறு பக்கத்தை நகர்த்துவது (மறுபெயரிடல்).
மணல்தொட்டியில் தொகுத்தலை முயற்சிக்கவும்


பயிற்சியைத் தொடர்க: பதிகை