உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிநூல்கள்:பயிற்சி (வடிவமைத்தல்)

விக்கிநூல்கள் இலிருந்து
வரவேற்பு   தொகுத்தல்   வடிவமைப்பு   உள்ளிணைப்புகள்   வெளியிணைப்புகள்   பேச்சுப்பக்கம்   கவனம் கொள்க   பதிகை   மறுஆய்வு    

விக்கிப்பீடியா கட்டுரைகளை வடிவமைத்தல் என்பது, மற்றபிற கணினி சொற்செயலிகளின் செயல்பாட்டிலிருந்து சற்றே வேறுபட்டது. அவற்றில் பயிலும் காண்பதே கோலம் (WYSIWYG) என்ற வழிமுறையில்லாமல் விக்கிப்பீடியா எழுத்துக் கோவைகளை, பக்கத்தின் பல பாகங்களைக் குறிக்கப் பயன்படுத்துகிறது. தொகுத்தலுக்கு எளிதாக உள்ளது இந்த "மொழி". இது பொதுவாக, விக்கிடெக்ஸ்ட்(Wikitext) அல்லது விக்கி மார்க் அப்(Wiki-markup) என வழங்கப்படுகிறது.

தடித்த மற்றும் சாய்வு எழுத்துகள்

[தொகு]

விக்கிப்பீடியாவில் மிகவும் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் விக்கிக்குறியீட்டுச்சொற்கள், எழுத்துக்களைத் தடிமனாகவும் சாய்வாகவும் காண்பிக்கப் பயன்படும் குறியீடுகளாம். இவ்வாறு தடிமனாகவோ சாய்வாகவோ எழுத்துகளைக் காண்பிக்க, விக்கிமொழியில் 'சொல்' அல்லது 'சொற்றொட'ரின் இருபுறமும், மூன்று அல்லது இரண்டு 'ஒற்றை மேற்கோள்குறி'களைப்(') பயன்படுத்துகிறோம்: (அதாவது, தடிமனாக ஆக்க மூன்று ; சாய்வாக ஆக்கிட இரண்டு).

தட்டச்சுசெய்வது கிடைப்பது
''சாய்வு'' சாய்வு

'''தடித்த'''

தடித்த

'''''தடித்தும் சாய்ந்தும்'''''

தடித்தும் சாய்ந்தும்

விக்கிப்பீடியாவில், ஒரு கட்டுரைப்பொருளின் பெயர் முதல்முறையாக குறிப்பிடப்படும்போது தடித்துக் காட்டப்படுகிறது. காட்டாக, சென்னை எனும் பக்கம் துவங்கும்போது:

சென்னை (chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும்.

சாய்வு எழுத்துகள் புத்தகங்கள், திரைப்படங்கள்,இசைவட்டுகள் மற்றும் கணினி/காணொளி விளையாட்டுகள் போன்றவற்றின் பெயர்களை இடும்போது பயன்படுத்தப்படுகிறன. ஒரு கட்டுரையின் பொருள், புத்தகமாகவோ திரைப்படமாகவோ இருந்தால், முதல்முறையாக குறிப்பிடப்படும்போது தடித்தும் சாய்ந்தும் காட்டப்படுகிறது.

எதனை, எப்போது, எப்படிப் பாவிப்பது என்பதற்குக் காண்க: விக்கிப்பீடியா:நடைக் கையேடு.

தலைப்புகளும் துணைத்தலைப்புகளும்

[தொகு]

தலைப்புகளும், துணைத்தலைப்புகளும் ஒரு கட்டுரையின் அமைப்பை மேம்படுத்த உதவும். கட்டுரையில் வேறுபட்ட உள்ளடக்கங்கள் விவரிக்கப்படும்போது, அவற்றிற்குத் துணைத்தலைப்புகள் கொடுத்துத் தனித்தனி பத்திகளாக அமைப்பது பெரிதும் தேவையான ஒன்றாகும்.

தலைப்புகளை இவ்வாறாக உருவாக்கலாம்:

தட்டச்சுசெய்வது கிடைப்பது

== தலைப்பு ==

தலைப்பு

[தொகு]

=== துணைத்தலைப்பு ===

துணைத்தலைப்பு

[தொகு]

ஒரு கட்டுரையில் குறைந்த அளவு நான்கு துணைத்தலைப்புகள் இருப்பின், ஒரு பொருளடக்கப் பெட்டி தானாகவே உருவாக்கப்படுகிறது. இப்பக்கத்தில் ஒரு தலைப்பு இட முயலவும் மணல்தொட்டி. ஏற்கெனவே மூன்று துணைத்தலைப்புகள் இருப்பின், நீங்கள் இட்ட தலைப்பு தானாகவே பொருளடக்கப்பெட்டியில் சேர்க்கப்படுவதைக் காணலாம்.

மீயுரை

[தொகு]

மீயுரை (HTML) குறிகளைப் பயன்படுத்தி மேம்பட்ட வடிவமைப்புகளான வண்ணங்கள்,அட்டவணைகள் போன்றவற்றைக் காட்சிப்படுத்தலாம். ஆனால் விக்கிப்பீடியாவைப் பாவிக்க உங்களுக்கு அவற்றில் முன்அனுபவம் இருக்க வேண்டியதில்லை.

நீங்கள் பயின்றவற்றை மணல்தொட்டியில் எழுதிப்பயில முயலவும்

பயிற்சியைத் தொடர்க: உள் இணைப்புகள்