விக்கிப்பீடியாவில் பயனர் எப்படி பங்களிக்கலாம்?

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search
தமிழ் விக்கிப்பீடியா
கலைக்களஞ்சியம்

வரைவிலக்கணம்
முக்கியத்துவம்
வரலாறு

பயனர் பங்களிப்பு
கட்டுரையாக்கம்
விசமிகள்

IP தடை

விக்கிப்பீடியா பயனர்களால் ஆக்கப்பட்ட ஒரு கூட்டாக்கம். அவரவருக்கு ஏற்ற நேரத்தில், இணையம் மூலம், அவரவருக்கு ஈடுபாடான முறையில் பங்களிக்லாம். விக்கிப்பீடியாவில் இறுக்கமான பணி வேண்டுதல்கள் இல்லை.

கட்டுரையாக்கம்[தொகு]

கட்டுரை எழுதுதல் விக்கிப்பீடியாவில் செய்யக்கூடிய ஓர் அடிப்படை பணி. கட்டுரையை எழுத முன்பு அந்த தலைப்பில் அல்லது அதற்கு ஒத்த தலைப்பில் கட்டுரை உள்ளதா என்று பாக்கவும். கூகிள் அல்லது விக்கி தேடு பொறியில் போட்டு இதனை உறுதி செய்யலாம். கட்டுரை இல்லாவிட்டால் விக்கி தேடல் பொறி தேடல் முடிவுகள் என்ற பக்கத்துக்கு செல்லும். அங்கே நீர் தேடிய பக்கம் "கட்டுரைத் தலைப்பு" என்ற கூற்று இருக்கும். கட்டுரைத் தலைப்பு சிகப்பு தொடுப்பில் இருக்கும். அந்த தொடுப்பை சுட்டினால் அந்த தலைப்பினான ஒரு புதுக் கட்டுரைப் பக்கத்துக்கு செல்லும். அங்கே நீங்கள் உங்கள் கட்டுரையை இட்டு சேமிக்க வேண்டும்.

விக்கி தமிழ் நடை[தொகு]

உங்களுக்கு விரும்பிய தலைப்புகள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா என்றால் எதாவது கனமாகத் தான் எழுத வேண்டும் என்று சிலர் எண்ணக்கூடும். சில தகவல்களுக்கு நாம் கூடிய கவனம் எடுத்து தொகுக்க முனைவது உண்மை. அதற்காக தலைப்புகள் எல்லாம் கனமாக இருக்க வேண்டியதில்லை.

உங்களுக்கு விருப்பமான நூல்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், உணவுகள், உடைகள், இடங்கள், சுற்றுலா ஈர்ப்புகள், நபர்கள், விளையாட்டுக்கள், புதிர்கள், கருத்துருக்கள் மற்று பல விடயங்கள் பற்றி நீங்கள் கட்டுரைகள் எழுதலாம்.

குறுங்கட்டுரையாக்கம்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் பல முக்கிய தலைப்புகளில் ஆழமாக கட்டுரைகள் எழுதப்படவேண்டும். பல துறைகள் அகலமாக அலசப்படவேண்டும். இரண்டுக்கும் ஒரு தொடக்கமாக குறுங்கட்டுரைகள் அமைகின்றன.

ஒரு குறுங்கட்டுரை என்பது ஒரு தலைப்பில் குறைந்தது 3 வசனங்கள் எழுதிவதாகும். விக்கி இடை இணைப்புகள், விக்கி உள் இணைப்புகள், வெளி இணைப்புகள், படங்கள் ஆகியவை இணைத்து குறுங்கட்டுரையை மேம்படுத்தலாம். விக்கி இடை இணைப்பு என்பது தமிழ் விக்கி தலைப்புக்கும் பிற மொழி தலைப்புகளுக்கும் இடது பக்கத்தில் தரப்படும் இணைப்பு ஆகும். இந்த இணைப்பு ஊடாக பிற பயனர் ஆங்கில விக்கிகோ பிற மொழி விக்கிகளுக்கோ சென்று மேலும் தகவல்களைப் பெற்று கட்டுரையை விரிபுபடுத்தலாம்.

விக்கி உள் இணைப்பு என்பது தமிழ் விக்கியிலேயே இருக்கும் கட்டுரைகளுக்கு இணைப்பு தருதல் ஆகும். இது சொல்ல வந்த தலைபில் இருந்து விலகாமல், ஆனால் பயனர்களுக்கு மேலும் விளக்கங்கள் தேவைப்படக்கூடிய தலைப்புகளுக்கு இணைப்பு தருவதாகும். இதுவே கலைச்சொற்களை இணைத்து தமிழில் அறிவியல் தொழில்நுட்ப கருத்துப்புலத்தை கட்டமைக்கு உதவுகின்றது.

வெளி இணைப்புகள் இணையத்தில் தலைப்பு தொடர்பாக இருக்கும் கட்டுரைகளுக்கான இணைப்புகள். சிறப்பாக தமிழ் கட்டுரைகளை தேடி இணைத்தால் பயனர்களுக்கு பயன் மிகும். தகுந்த ஒளிப்படம், விளக்கப்படம் ஆகியவற்றை இணைத்தால் கட்டுரைப் படிக்க ஆர்வத்தை தூண்டும். ஒலி, நிகழ்பட கோப்புக்களும் இருந்தால் இணைக்கலாம். விக்கி நுட்பங்கள் பழக்கமானவுடன் வார்ப்புருக்களைப் (Template) பயன்படுதி, தகவல்களை சுருக்கமாக தரலாம். பட்டியல், அட்டவணை முறைகளிலும் தகவல்களைப் பகிரலாம். இறுதியாக தகுந்த பகுப்புகளுக்குள் (வகைக்குள்) அந்த கட்டுரையை இடவேண்டும். விக்கி பக்கத்தில் எ.கா பகுப்பு:அறிவியல் என்று சேர்ப்பதன் மூலம் அந்த பகுப்புக்குள் இடலாம்.

எல்லாவற்றாயும் நீங்களே செய்ய வேண்டும் என்றில்லை. மூன்று வசனங்களை இட்டால் பிற பயனர்கள் வந்து மேம்படுத்துவர். அல்லது நீங்கள் இவ்வாறு ஆக்கப்பட்ட குறுங்கட்டுரைகளை மேம்படுத்தலாம். எனவே இங்கே எழுத்து திறமை எனபதிலும் பார்க்க ஆர்வமும், ஓரளவு விக்கி நுட்பமும் தான் வேண்டும். மாணவர், துறைசாரார், எழுத்தாளர்கள். வலைப்பதிவர்கள், தமிழ் ஆர்வலர்கள் அறிஞர்கள் என எல்லோரும் தமிழ் விக்கியில் குறுங்கட்டுரைகள் ஆக்க முன்வரவேண்டும்.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் விமர்சனம் அமைப்பு அமைப்பியல் மற்றும் தயாரிப்பு பொறுப்பு சட்டம் நிதி ஆலோசனை சேவைகள் நிதி மற்றும் வங்கிகள் மருத்துவம் உதவியில் வாழும் வாழ்க்கை உளவியல் நிபுணர்கள் மற்றும் உளவியல் ஊட்டச்சத்து கல்லறைகள் மற்றும் தகனம் கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை மருத்துவமனை குடும்ப நல உத்தியோகத்தர்கள் கேட்டல் சிறுநீரக மருத்துவர்கள் சுகாதாரம் உள்ளே கொழும்பு மற்றும் பல பக்க விருப்பங்கள் தயாரிப்பு கட்டடம் கட்டிடங்கள் ங மற்றும் பல பக்கம் ஒரு சில நேரங்களில் சில மனிதர்கள் வாழும் மக்கள் பெரும்பாலும் ஒரு ஒற்றை மற்றும் பல பக்கம் தளத்தில் தயாரிப்பு உலோக ங மற்றும் தயாரிப்பு கட்டடம் கட்டிடங்கள் கட்டுமானப்பணி எந்திரங்கள் தொழில்நுட்ப கட்டமைப்பு ஒரு ஒற்றை தயாரிப்பு பக்கம் தளத்தில் தயாரிப்பு ஓவியம் மற்றும்

மொழிபெயர்ப்பு[தொகு]

விக்கியாக்கம்[தொகு]

மேற்கோள் சேர்த்தல்[தொகு]

வகைப்படித்தல்[தொகு]

இன்றைப்படுத்தல்[தொகு]

நிர்வாகம்[தொகு]

அறிமுகப்படுத்தல், தொடர்பாடல்[தொகு]

நிரலாக்கம்[தொகு]

வரைகலை[தொகு]

படம் சேர்த்தல்[தொகு]

கருத்து பகிர்வு[தொகு]

மெய்பார்த்தல்[தொகு]