விசமிகளை எதிர்கொள்வது எப்படி?

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search
தமிழ் விக்கிப்பீடியா
கலைக்களஞ்சியம்

வரைவிலக்கணம்
முக்கியத்துவம்
வரலாறு

பயனர் பங்களிப்பு
கட்டுரையாக்கம்
விசமிகள்

IP தடை

  • விக்கிபீடியாவை யாரும் தொகுக்க முடியும் என்பது உண்மைதான். ஆனால் கணக்குள்ள பயனர்களுக்கு மேலதிக வசதிகள் அல்லது அனுமதிகள் உண்டு. எடுத்துக்காட்டாக, அவர்களே பக்கங்களை பெயர் மாற்ற அல்லது நகர்த்த முடியும். அண்மையில், ஆங்கில விக்கிபீடியாவில், சோதனையளவில், கணக்குள்ள பயனர்கள்தான் கட்டுரைகளை ஆரம்பிக்க முடியும் போன்ற ஒரு கட்டுப்பாடு வந்தது, ஆனால் அது தேவையற்றது என்று கண்டறிப்பட்டுள்ளது.


  • ஏறக்குறைய 1000 பயனர்கள் தமிழ் விக்கிபீடியாவில் இருந்தாலும், தமிழ் விக்கிபீடியா சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நம்பிக்கை வாய்ந்த 11 நிர்வாகிகள் பட்டியலில் உள்ளார்கள். இவர்களில் ஆறு பேர் வரையில் தற்சமயம் பல பங்களிப்புகளை நல்கி வருகின்றார்கள். நிர்வாகிகளுக்கு பக்கங்களை நீக்குவது, பூட்டப்பட்ட பக்கங்களை தொகுப்பது போன்ற மேலதிக அனுமதிகள் உண்டு.


  • தமிழ் விக்கிபீடியாவில் நிர்வாகி அணுக்கத்தை வழங்ககூடிய இரு "அதிகாரிகள்" உண்டு. ஆங்கில விக்கிபீடியாவில் மேலதிக சில கட்டமைப்புகளும் உண்டு. (இப்படி பிரிவுகள் இருந்தாலும், அனைவரும் தன்னார்வலர்களே. எவ்வளவு பொறுப்பை நீங்கள் ஏற்கின்றீர்கள், எவ்வளவு நேரத்தை தர முன்வருகின்றீர்கள், எப்படி சமூகத்தில் இயங்குகின்றீர்கள் என்பதைப் பொறுத்துதான் எந்த வித்தியாசங்களும் அமைகின்றன. மற்றப்படி அனைவரும் பயனர்களே).


  • எந்த ஒரு மாற்றமும் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் பிரதிபலிக்கும். எந்த ஒரு பயனரும் அம்மாற்றங்களை கவனித்து நடவடிக்கை எடுக்க முடியும்.


  • ஒவ்வொரு பயனரும் தனக்கு முக்கியமான கட்டுரைகளை தனது கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்கலாம். அக்கட்டுரைகளில் எவற்றையாவது யாரும் மாற்றும் பொழுது அம்மாற்றங்கள் தொடர்பான தகவல்களை அந்த பயனர் மின் அஞ்சல் மூலமாகவோ, அல்லது புகுபதிகை செய்யும் பொழுதோ பெற்று நடவடிக்கை எடுக்கலாம்.


  • தமிழ் விக்கிபீடியா நிர்வாகிகள் அவ்வப்பொழுது தமிழ் விக்கிபீடியாவில் நிகழும் மாற்றங்களை கவனித்த வண்ணமே இருப்பார்கள். ஆரோக்கியமற்ற மாற்றங்கள் இடம்பெறும் பொழுது அவற்றை அவர்கள் சீர்செய்ய முயல்வார்கள்.


  • ஒரு சில குறிப்பிட்ட பக்கங்கள் அடிக்கடி கீழ்த்தரமான மாற்றங்களுக்கு உட்படுமானால் அப்பக்கங்களை பூட்டு போட்டு வைக்கலாம். அதாவது நிர்வாகிகளை தவிர பொது பயனர்கள் மாற்ற முடியாதபடி தொகுப்புப் பக்கத்தை முடக்க முடியும். மேலும், முதற் பக்கம் போன்ற முக்கிய சில பக்கங்கள் இப்படி பூட்டு போடப்பட்டவையே.


  • சில பயனர்கள் வேண்டும் என்றே தொடர் விசமத்தன வேலைகளில் ஈடுபட்டால் அவர்களின் ஐபி முகவரி அல்லது பயனர் கணக்கை நிலையாகவோ குறிப்பிட்ட காலத்துக்கோ தடை செய்யலாம்.


கட்டுபாடுகள் படி படியாக தேவைகேற்ப உபயோகப்படுத்த முடியும். தமிழ் விக்கிபீடியா தமிழ் ஆர்வலர்களிடம் பரந்த ஆதரவை கொண்டிருப்பதாகவே உணர்கின்றோம். குறைகள் இருந்தால் நேரடியாக கலந்துரையாடி சரி செய்யலாம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.