வெஃகாமை
Appearance
|
திருக்குறள் > இல்லறவியல்
« முன் பக்கம்: அன்புடைமை | திருக்குறள் »
இல்லறவியல் » விருந்தோம்பல் | அடுத்த பக்கம்: இனியவை கூறல் »
- 171. நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
- குற்றமும் ஆங்கே தரும்.
- நடுநிலை இன்றி தனக்குரிமை இல்லாத பொருளுக்கு ஆசைப்பட்டால், குடிப் பெருமை கெட்டு பழியை சுமக்க நேரும்.
- குற்றமும் ஆங்கே தரும்.
- 172. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
- நடுவன்மை நாணு பவர்.
- நடுநிலை தவறுவதற்காக வெட்கம் கொள்ளுபவர், தன் நன்மைக்காக ஆசைப்பட்டு பழிக்கு அஞ்சி செய்ய மாட்டார்கள்.
- நடுவன்மை நாணு பவர்.
- 173. சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
- மற்றின்பம் வேண்டு பவர்.
- தற்காலிக இன்பத்துக்கு ஆசைப்பட்டு அறத்துக்கு ஆகாத செயல் செய்யாதவரே, ஆழ்ந்த இன்பத்தை அடைய முடியும்.
- மற்றின்பம் வேண்டு பவர்.
- 174. இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
- புன்மையில் காட்சி யவர்.
- தன் புலன்களை அடக்கி தவறான ஆசைகளை மறுப்பவர், வறுமையிலும் செம்மையுடையவர் ஆவர்
- புன்மையில் காட்சி யவர்.
- 175. அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
- வெஃகி வெறிய செயின்.
- ஆசையால் தவறான செயல் செய்ய துணிபவருக்கு, நுண்ணிய அறிவிருந்து பயன் என்ன?
- வெஃகி வெறிய செயின்.
- 176. அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
- பொல்லாத சூழக் கெடும்.
- அருள் வேண்டி அதற்கான வழியில் நிற்பவன், பொருளுக்கு ஆசைப்பட்டு செயல் பட்டால் கேடு நேரும்.
- பொல்லாத சூழக் கெடும்.
- 177. வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
- மாண்டற் கரிதாம் பயன்.
- ஆசையால் செய்யும் செயல் சிறப்புப் பெறுவது அரிது ஆதலால் ஆசையை கை விடுதல் நன்று
- மாண்டற் கரிதாம் பயன்.
- 178. அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
- வேண்டும் பிறன்கைப் பொருள்.
- பிறருடைய பொருளுக்கு ஆசைப் படாமையே, குறைவற்ற செல்வம் தரும்.
- வேண்டும் பிறன்கைப் பொருள்.
- 179. அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
- திறன்அறிந் தாங்கே திரு.
- அறன் எதுவென அறிந்து செயல்படும் அறிவுடையோரிடம் செல்வம் தானாய்ச் சேரும்.
- திறன்அறிந் தாங்கே திரு.
- 180. இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
- வேண்டாமை என்னுஞ் செருக்கு.
- துன்பம் நேரும் என எண்ணாமல் ஆசைப்படுபவனுக்கு துன்பம் நேரும். அத்தகைய ஆசையை வேண்டம் என வெறுப்பவருக்கு வெற்றி கிட்டும்
- வேண்டாமை என்னுஞ் செருக்கு.