2-வது திருமொழி - அரவணையாய்
Appearance
--வெ.ராமன் 09:43, 3 பெப்ரவரி 2006 (UTC)
முலையுண்ணல்
[தொகு]கலிவிருத்தம்
அரவணையாய் ! ஆயரேறே ! அம்மமுண்ணத் துயிலெழாயே* இரவுமுண்ணாது உறங்கிநீபோய் இன்றுமுச்சி கொண்டதாலோ* வரவும்காணேன் வயிறசைந்தாய் வனமுலைகள் சோர்ந்துபாய* திருவுடைய வாய்மடுத்துத் திளைத்துதைத்துப் பருகிடாயே. (1)
வைத்தநெய்யும் காய்ந்தபாலும் வடிதயிரும் நறுவெண்ணெயும்* இத்தனையும் பெற்றறியேன் எம்பிரான்! நீபிறந்தபின்னை* எத்தனையும் செய்யப்பெற்றாய் ஏதும்செய்யேன் கதம்படாதே* முத்தனைய முறுவல்செய்து மூக்குறிஞ்சி முலையுணாயே. (2)
தந்தம்மக்கள் அழுதுசென்றால் தாய்மாராவார் தரிக்கில்லார்* வந்துநின்மேல் பூசல்செய்ய வாழவல்ல வாசுதேவா!* உந்தையார்உன் திறத்தரல்லர் உனனைநானொன் றுரப்பமாட்டேன்* நந்தகோப னணிசிறுவா! நான்சுரந்த முலையுணாயே. (3)
கஞ்சன்தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச்சகடு கலக்கழிய* பஞ்சியன்ன மெல்லடியால் பாய்ந்தபோது நொந்திடுமென்று* அஞ்சினேன்காண் அமரர்கோவே! ஆயர்கூட்டத் தளவன்றாலோ* கஞ்சனைஉன் வன்சனையால் வலைப்படுத்தாய் முலையுணாயே . (4)
தீயபுந்திக் கஞ்சன் உன்மேல் சினமுடையன், சோர்வுபார்த்து* மாயந்தன்னால் வலைப்படுக்கில் வாழகில்லேன் வாசுதேவா!* தாயர்வாய்ச்சொல் கருமம்கண்டாய் சாற்றிச்சொன்னேன் போகவேண்டா* ஆயர்பாடிக்கணி விளக்கே! அமர்ந்துவந்துஎன் முலையுணாயே. (5)
மின்னனைய நுண்ணிடையார் விரிகுழல்மேல் நுழைந்தவண்டு* இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய்!* உன்னைக்கண்டார் என்னநோன்பு நோற்றாள்கொலோ இவனைப்பெற்ற வயிருடையாள்!* என்னும்வார்த்தை யெய்துவித்த இருடிகேசா!முலையுணாயே. (6)
பெண்டிர்வாழ்வார் நின்னொப்பாரைர் பெறுதுமென்னும் ஆசையாலே* கண்டவர்கள் போக்கிழந்தார் கணணிணையால் கலக்கநோக்கி* வண்டுலாம் பூங்குழலினார் உன்வாயமுதம் உண்ணவேண்டி* கொண்டுபோவான் வந்துநின்றார் கோவிந்தா! நீமுலையுணாயே. (7)
இருமலைபோல் எதிர்ந்தமல்லர் இருவரங்கம் எரிசெய்தாய்!* உன் திருமலிந்து திகழ்மார்வு தேக்கவந்து என்னல்குலேறி* ஒருமுலையை வாய்மடுத்து ஒருமுலையை நெருடிக்கொண்டு* இருமுலையும் முறைமுறையா ஏஙகிஏங்கி இருந்துணாயே. (8)
அங்கபலப் போதகத்தில் அணிகொள்முத்தம் சிந்தினாற்போல்* செங்கமல முகம்வியர்ப்ப தீமைசெயது இம்முற்றத்தூடே* அங்கமெல்லாம் புழுதியாக அலையவேண்டாம் அம்ம?* விம்ம அங்கமார்க் கமுதளித்த அமரர்கோவே! முலையுணாயே. (9)
ஓடவோடக் கிங்கிணிகள் ஒலிக்குமோசைப் பாணியாலே* பாடிப்பாடி வருகின்றாயைப் பற்பநாபன் என்றிருந்தேன்* ஆடிஆடி அசைந்தசைந்திட்டு அதனுக்கேற்ற கூத்தையாடி* ஓடியோடிப் போய்விடாதே உத்தமா! நீமுலையுணாயே . (10)
வாரணிந்த கொங்கையாய்ச்சி மாதவா! உண்ணென்ற மாற்றம்* நீரணிந்த குவளைவாசம் நிகழநாறும் வில்லிபுத்தூர்* பாரணிந்த தொல்புகழான் பட்டர்பிரான் பாடல்வல்லார்* சீரணிந்த செங்கண்மால்மேல் சென்றசிந்தை பெறுவர்தாமே. (11)
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்