4-வது திருமொழி - நாவகாரியம்
Appearance
--வெ.ராமன் 10:27, 24 ஏப்ரில் 2006 (UTC) முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும்,அவ்வாறு அனுபவியாதவரை இழித்தும் கூறுதல் எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் நாவ காரியம் சொல்லி லாதவர் நாள்தொறும் விருந்தோம்புவார்* தேவ காரியம் செய்து வேதம் பயின்று வாழ்திருக்கோட்டியூர்* மூவர் காரியமும் திருத்தும் முதல்வனைச் சிந்தியாத* அப் பாவ காரிகளைப் படைத்தவன் எங்ஙனம் படைத்தான்கொலோ! 1 குற்ற மின்றிக் குணம்பெருக்கிக் குருக்களுக்கு அனுகூலராய்* செற்ற மொன்று மிலாத வண்கையினார்கள் வாழ்திருக்கோட்டியூர்* துற்றி யேழுலகுண்ட தூமணி வண்ணன் தன்னைத் தொழாதவர்* பெற்றதாயர் வயிற்றினைப் பெருநோய் செய்வான் பிறந்தார்களே. 2 வண்ணநல் மணியும் மரகதமும் அழுத்தி நிழலெழும் திண்ணைசூழ்* திருக்கோட்டியூர்த் திருமாலவன் திருநாமங்கள்* எண்ணக் கண்டவிரல்களால் இறைப்பொழுதும் எண்ணகிலாதுபோய்* உண்ணக் கண்டதம் ஊத்தைவாய்க்குக் கவளமுந்துகின்றார்களே. 3 உரகமெல்லணையான் கையில் உறைசங்கம்போல் மடவன்னங்கள்* நிரைகணம் பரந்தேறும் செங்கமலவயல் திருக்கோட்டியூர்* நரகநாசனை நாவிற் கொண்டழையாத மானிட சாதியர்* பருகுநீரும் உடுக்குங் கூறையும் பாவம்செய்தன தாங்கொலோ! 4 ஆமையின் முதுகத்திடைக் குதிகொண்டு தூமலர்சாடிப்போய்* தீமைசெய்து இளவாளைகள் விளையாடு நீர்த்திருக்கோட்டியூர் நேமிசேர் தடங்கையினானை நினைப்பிலா வலிநெஞ்சுடை* பூமிபாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே. 5 பூதமைந்தொடு வேள்வியைந்து புலன்களைந்து பொறிகளால்* ஏதமொன்று மிலாத வண்கையினார்கள் வாழ்திருக்கோட்டியூர்* நாதனை நரசிங்கனை நவின்றேத்துவார்கள் உழக்கிய* பாததூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே. 6 குருந்த மொன்றொ சித்தானொடும் சென்று கூடியாடி விழாச்செய்து* திருந்து நான்மறையோர் இராப்பகல் ஏத்திவாழ் திருக்கோட்டியூர்* கருந்தட முகில்வண்ணனைக் கடைக்கொண்டு கைதொழும்பத்தர்கள்* இருந்த வூரிலிருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார்கொலோ! 7 நளிர்ந்தசீலன் நயாசலன் அபிமனதுங்கனை* நாள்தொறும் தெளிந்த செல்வனைச் சேவகங்கொண்ட செங்கண்மால் திருக்கோட்டியூர் குளிர்ந்துறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவாருள்ள நாட்டினுள்* விளைந்த தானியமும் இராக்கதர்மீது கொள்ளகிலார்களே. 8 கொம்பினார் பொழில்வாய் குயிலினம் கோவிந்தன் குணம்பாடுசீர்* செம்பொனார் மதிள்சூழ் செழுங்கழனியுடைத் திருக்கோட்டியூர்* நம்பனை நரசிங்கனை நவின்றேத்துவார்களைக் கண்டக்கால்* எம்பிரான்தன சின்னங்கள் இவரிவரென்று ஆசைகள் தீர்வனே. 9 காசின்வாய்க் கரம்விற்கிலும் கரவாது மாற்றிலி சோறிட்டு* தேசவார்த்தை படைக்கும் வண்கையினார்கள் வாழ்திருக்கோட்டியூர்* கேசவா!புருடோத்தமா!கிளர்சோதியாய்! குறளா! என்று* பேசுவார் அடியார்கள் எந்தம்மை விற்கவும் பெறுவார்களே. 10 சீதநீர் புடைசூழ் செழுங்கழனியுடைத் திருக்கோட்டியூர்* ஆதியா னடியாரையும் அடிமையின்றித் திரிவாரையும்* கோதில் பட்டர்பிரான் குளிர்புதுவைமன் விட்டுசித்தன்சொல்* ஏதமின்றி உரைப்பவர்கள் இருடீகேசனுக்காளரே. 11 பெரியாழ்வார் திருவடிகளே சரணம்