பொருள் நோக்கு நிரலாக்கம்/பொதிவு

விக்கிநூல்கள் இலிருந்து

பொதிவு என்பது பல எளிய பொருட்களைக் கொண்டு கூடிய சிக்கலான பொருளை உருவாக்குதல் ஆகும். அதாவது கூடிய சிக்கலான பொருள் எளிய பொருட்களின் பொதிவாக அமையும். சிக்கலான பொருள் எளிய பொருட்களை உடைமையாகக் கொண்டிருக்கும். அப் பொருள் அழிந்தால் எளிய பொருட்கள் தனித்தியங்க முடியாது. இந்த வகை உறவை முழு-உப ("whole-part") அல்லது உடைமை ("owns a") உறவு என்பர்.

எடுத்துக்காட்டுக்கு ஒரு பல்கலைக்கழகம் அதன் துறைகளினால் (Departments) ஆல் ஆனது. ஒரு பல்கலைக்கழகம் இல்லாமல் போகும் போது துறைகள் இருக்க முடியாது. ஒரு துறை பலகலைக்கழகத்தின் ஒரு பகுதி (is a part of) ஆகும்.

பொதிவு ஒரு சிறப்பு வகை திரட்டு உறவு ஆகும். பிள்ளை அல்லது உறுப்புப் பொருட்கள் தனித்து வாழ்க்கை வட்டத்தைக் கொண்டு இராது. பெற்றோர் பொருள் அழிந்தால் பிள்ளை அல்லது உறுப்புப் பொருட்கள் அழியும்.

வெளி இணைப்புக்கள்[தொகு]