பயனர் பேச்சு:Info-farmer

Page contents not supported in other languages.
விக்கிநூல்கள் இல் இருந்து
Info-farmer! விக்கிநூல்கள் சமுதாயம் தங்களை வரவேற்கிறது!
வாருங்கள், Info-farmer!
வாருங்கள் Info-farmer, உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
விக்கிநூல்களுக்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிநூல் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிநூல் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஆலமரத்தடியில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள், அல்லது உங்களுக்கான மணல்தொட்டியை உருவாக்குங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

புது நூல் ஒன்றைத் துவக்க நூலின் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் அல்லது ஏற்கனவே தொகுப்பில் உள்ள நூலிற்கு தங்களின் பங்களிப்பை நல்க தொகுப்பில் உள்ள நூல்கள் பக்கத்திற்குச் செல்லவும்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவியாய் இருக்கும். மேலும், விக்கிநூல் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை அழைக்க உதவியாக இருக்கும் நன்றி.


உங்கள் கருத்துக்கு நன்றி, நீங்கள் சொல்வது சரியானதே, ஏனெனில் நானும் அதைப்பற்றியே சிந்திக்கின்றேன், திருக்குறளின் சிறப்பே இருவரிகள், ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் தேவை, அத்துடன் திருவள்ளுவரின் சிறப்பான படமும் அவசியம்.உங்களது கருத்துக்கள் என்னை ஊக்கப்படுத்தும். --சமீர் 09:45, 28 ஆகஸ்ட் 2011 (UTC)

Invite to WikiConference India 2011[தொகு]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் Info-farmer,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

ஹிந்தி இந்தியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது[தொகு]

அசைப்படங்கள் நன்று தகவலுழவன் நானும் தாங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்கிறேன். பெயரை மாற்றம் செய்து ஒரு நகர்வுப் பாதையை உருவாக்கி உள்ளேன். சோதனை செய்து பார்க்கவும்.

எழுத்துக்கள் - மழலையர் பதிப்பு[தொகு]

தகவலுழவன். எழுத்துக்கள் - மழலையர் பதிப்பு என்ற நூலின் பக்கங்களில் வெளியிணைப்புகள் கொண்டு உள்ளடக்கத்தை தொகுத்துள்ளீர்கள். நூற்பக்கத்தின் உள்ளடக்கத்தில் பெரும்பாலும் உள்ளிணைப்புகள், வெளியிணைப்புகள் இருக்காது. அதிகாரங்களுக்கு மட்டும் தான் இணைப்புகள் வரும். எனவே அதனை நீக்க பரிந்துரைகிறேன். --இராஜ்குமார் 12:42, 17 செப்டெம்பர் 2011 (UTC)

  • விக்கி நூலில் அனுபவமில்லை. நூல் உருவாக்குபவர் மறவாமல், நான் உருவாக்கிய அசைப்படங்களை பயன்படுத்தக் கருதியே பக்கத்தொடுப்பு கொடுத்தேன். உரிய இடத்திற்கு மாற்றிவிடவும்.நன்றி.வணக்கம்.--தகவலுழவன் 13:21, 17 செப்டெம்பர் 2011 (UTC)
அந்த நூலின் பேச்சுப்பக்கத்தில் உங்கள் குறிப்புகளை ஒட்டியுள்ளேன். உங்கள் கையொப்பம் அங்கே போட்டுவிடுங்கள். நன்றி. --இராஜ்குமார் 17:23, 17 செப்டெம்பர் 2011 (UTC)
ஓ.. நன்றி. அவசரத்தில் நடைமுறையை மறந்தேன். இனி உரையாடற்பக்கத்தினைக் கையாளுகிறேன்.--தகவலுழவன் 05:02, 18 செப்டெம்பர் 2011 (UTC)
அசைப்படங்கள் அருமை தகவலுழவன். மேலும் தங்களின் அசைப்படங்களையும் ஒவ்வொரு எழுத்தின் கீழும் எழுதும் முறை என்ற தலைப்பிட்டு கொடுத்து விடலாம் என எண்ணுகிறேன். ஒவ்வொரு எழுத்தையும் அதற்கு உரிய ஒலி, எழுதும் முறை, உச்சரிப்பு முறை போன்றவைகள் இடம் பெறல் வேண்டும் எனவும் எண்ணுகிறேன். மொழிகள் பாடங்களில் உள்ள ஒவ்வொரு மொழிக்கும் தேவையான அசைப்படங்களையும் அவற்றின் இணைய தொடுப்புகளையும் கொடுக்க முடியுமேயானால் தமிழ் விக்கிக்கு நன்மை உண்டாகும் எனவும் எண்ணுகிறேன். வேறு ஏதும் மொழிகளில் தங்களுக்கு பரிச்சயம் இருக்குமேயானால், அவற்றையும் தொகுத்து, அவைகள் உள்ள தொடுப்புகளையும் தந்திடுமாறு வேண்டுகிறேன். --Pitchaimuthu2050 18:50, 17 செப்டெம்பர் 2011 (UTC)
உங்கள் எண்ணப்படி உருவாக்குங்கள்.கடந்த மூன்று வருடங்களாக விக்சனரி திட்டத்தில் ஈடுபாடு கொண்டுள்ளேன். அங்கு படிப்படியாக முன்னேறுகிறேன். இன்னும் கற்க வேண்டியவை ஏராளம். வாரம் ஒரு முறையாவது இங்கு வருகிறேன். நூலகம் திட்டத்திலும் ஈடுபாடு கொண்டுள்ளதால், காலத்தை கனிவாகப் பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளேன். அப்படங்கள் விக்கி ஊடக நடுவத்தில்(commons) இருப்பதால், மற்ற படங்களுக்கு இணைப்பு கொடுப்பது போல கொடுத்தால் வந்து விடும்.எடுத்துக்காட்டாக, விக்சனரியின் இப்பக்கத்திற்குச் செல்லவும்.அங்கு தமிழ் எழுதப்பழகு என்று உட்பிரிவின், பகுதிகளுக்குள் சென்று காணவும். ஒரு படத்தின் கோப்பின் பெயரைக் காண, படத்தின் மீது அழுத்தவும். அப்பெயரை நீங்கள் எந்த மொழி விக்கித்திட்டத்தில் இட்டாலும், அது அங்கு தோன்றும். தமிழ்70%, ஆங்கிலம்50%, ( 10% = இந்தி, மலையாளம்,தெலுங்கு) தெரியும். வணக்கம்--தகவலுழவன் 05:02, 18 செப்டெம்பர் 2011 (UTC)
"https://ta.wikibooks.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Info-farmer&oldid=14774" இருந்து மீள்விக்கப்பட்டது