பொருள் நோக்கு நிரலாக்கம்/செயலிகள்

விக்கிநூல்கள் இலிருந்து

ஒரு வகுப்பு பண்புகளையும் செயலிகளையும் கொண்டிருக்கிறது. ஒரு வகுப்பு வரையறை செய்யும் பொருள் செய்யக் கூடிய செயற்பாடுகள் (actions) அல்லது அப் பொருளின் நடத்தைகள் (behavior) அவ் வகுப்பின் செயலிகள் ஊடாக நடைபெறுகின்றன. எடுத்துக்காட்டாக மாணவர் என்ற வகுப்பின் செயல்களாக அவர் வகுப்பில் இணைதல், வகுப்பில் இருந்து விலகுதல், வகுப்பு அட்டவணை பெறுதல், அறிக்கை பெறுதல், பட்டம்பெறுதல் போன்றவை அமையலாம்.

ஒரு பொருளின் செயலி இயக்கப்படும் போது அதனால் வகுப்பின் பண்புகளில் இருக்கும் தகவல்களைப் பயன்படுத்த முடியும். ஆகையால் ஒரு பொருளின் நிலையை செயலியால் கட்டுப்படுத்த முடியும்.

எடுத்துக் காட்டுக்கள்[தொகு]

யாவா[தொகு]

நாம் முன்னர் பார்த்த மாணவர் வகுப்பு எடுத்துக்காட்டில் வகுப்புக்குப்_பதி என்பது அந்த வகுப்பின் செயலி ஆகும். கட்டுநரையும், பெறுநர்கள் இடுநர்களையும் சிறப்புச் செயலிகளாகக் கருதுவர்.

package student;

public class ணவர {
	// பண்புகள்/மாறிகள்
	protected int ணவர_எண;
	protected String யர;	

	// செயலிகள்
	public boolean வக_பதி(String வக, String கலி){
		System.out.println(this.யர + " " + வக + " வகுப்பில் " + கலி + " ஆண்டுக்கு சேர்ந்துள்ளார்.");	
		return true;
	}
}