பொருள் நோக்கு நிரலாக்கம்/செயலி மேலோங்கல்

விக்கிநூல்கள் இலிருந்து

செயலி மோலோங்கல் (Method overriding) என்பது, தாய் வகுப்பு செயலியை ஒரு உப வகுப்பு செயலி கொண்டு மாற்றி அமைப்பது ஆகும். இவ்வாறு மாற்றி எழுதும் போது செயலி மிகைப்பாரமேற்றல் போல் அல்லாமல் செயலிக் கையெழுத்து தாய்ப் பகுப்பின் செயலியினது போன்றே அமைய வேண்டும்.

எந்தச் செயலி அழைக்கப்படும் என்பது எந்தப் பொருள் செயலியை அழைக்கிறது என்பதைப் பொறுத்து அமையும். தாய்ப் பகுப்பு செயலியை அழைத்தால் தாய்ப் பகுப்பின் செயலி இயக்கப்படும். உப பகுப்பு அழைத்தால் உப பகுப்பின் செயலி இயக்கப்படும்.