விலங்குகள்/வீட்டு விலங்குகள்/பசு மாடு

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search


வீட்டு விலங்குகளில் மிகவும் பயன் தரும் விலங்கு பசு ஆகும். வைக்கோல் , புல்,புண்ணாக்கு போன்றவ்ற்றை உண்ணுகிறது. கழுநீரை விரும்பிக் குடிக்கிறது. பசு மாடு கன்று போட்டு பால் தரும் இனத்தைச் சேர்ந்தது.பசு மாடு நமக்குப் பால் தருகிறது.தாயிடம் பால் அருந்த முடியாத குழந்தைகளுக்கு பசும் பால் உணவாகிறது.இவ்வாறு பல உயிர்களைக் காப்பதினால்தான் பசுமாட்டை "கோமாதா" என்று அழைக்கிறோம்.(கோ- என்றால் பசு.மாதா- என்றால் அம்மா.)


பசுவின் சிறு நீர் "கோமயம்" என்று அழைக்கப்படுகிறது.இது நல்ல கிருமி நாசினி என்றும் இதனை வீட்டில் தெளித்தால் வீட்டில் உள்ள கிருமிகள் இறந்து போகும் என்றும் நம்புகின்றனர்.

பசுவின் சாணத்தைக் கொண்டு வீட்டின் தரையை மெழுகுவார்கள்.பசுஞ்சாணமும் நல்ல கிருமி நாசினி ஆகும்.

பசு மாட்டின் சாணம், சிறுநீர் போன்றவற்றைக் கலந்து தயாரிக்கப் படும் "பஞ்ச கவ்யம்" பயிர்களுக்கு சிறந்த உரமாக ஆகிறது.

Jersey cattle in Jersey.jpg
Da morgannwgbach.jpg