பயனர் பேச்சு:Parvathisri

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிநூல்கள் இலிருந்து


Parvathisri! விக்கிநூல்கள் சமுதாயம் தங்களை வரவேற்கிறது!
வாருங்கள், Parvathisri!
வாருங்கள் Parvathisri, உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
விக்கிநூல்களுக்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிநூல் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிநூல் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஆலமரத்தடியில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள், அல்லது உங்களுக்கான மணல்தொட்டியை உருவாக்குங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

புது நூல் ஒன்றைத் துவக்க நூலின் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் அல்லது ஏற்கனவே தொகுப்பில் உள்ள நூலிற்கு தங்களின் பங்களிப்பை நல்க தொகுப்பில் உள்ள நூல்கள் பக்கத்திற்குச் செல்லவும்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவியாய் இருக்கும். மேலும், விக்கிநூல் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை அழைக்க உதவியாக இருக்கும் நன்றி.

--சமீர் 07:07, 27 ஆகஸ்ட் 2011 (UTC)

தமிழ் விக்கி நூல்களுக்கு அழைப்பு[தொகு]

தமிழ் விக்கி நூல்கள் சமுதாயம் தங்களின் உதவியை நாடுகிறது

தமிழ் விக்கி நூல்கள் தங்களின் உதவியை நோக்கி உள்ளது. இதுவரை எந்த ஒரு உருப்படியான தமிழ் நூல்கள் (விக்கி மூலத்தில் உள்ள நூல்களைத் தவிர்த்து) எதுவும் இயற்றப்படவில்லை. எனவே தங்களின் உதவி விக்கி நூல்களுக்குத் தேவைப்படுகிறது. இதுவரை சுமார் 500 பக்கங்களிலே அங்கு நாம் கொண்டு உள்ளோம். எனவே நமது கவனம் விக்கி நூல்களின் பக்கமும் செலுத்தவேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம். எனவே தங்களிடம் சில வேண்டுகோளை வைக்க விரும்புகிறோம். அவையாவன:

  1. தாங்கள் விரும்பும் நூல்கள் (விக்கி மூலத்தின் அடுக்கில் கீழ் செல்ல முடியாத நூல்கள், முக்கியமாக பொது காப்புரிமையாக்கப்பட்ட நூல்களை) தமிழ் விக்கி நூல்களில் இருக்கின்றனவா என தேடித் பாருங்கள்.
  2. ஒரு வேளை அங்கு இல்லை என்றால் அந்த புத்தகத்தை ஆரம்பித்து வையுங்கள். முதற் பக்கத்தில் தாங்கள் எந்த எந்தத் தலைப்புகளெல்லாம் இருக்க வேண்டுமென விரும்புகிறீர்களோ அவற்றைக் கொண்ட அந்த நூலின் முதற் பக்கத்தை ஆரம்பித்து வையுங்கள்.
  3. அல்லது தற்போது தொகுப்பில் உள்ள நூல்களுக்கு உங்களால் பங்களிக்க முடியும் எனில் தொகுப்பில் உள்ள நூல்களின் பட்டியல் இங்கு உள்ளது.

நமக்காகக் காத்திருக்கும் பணிகள்[தொகு]

விவசாயிகள் மற்றும் வேளாண் துறையினருக்கு[தொகு]

விவசாயம் மற்றும் உணவுப் பொருள்கள் உற்பத்தி குறித்த கருத்துக்களை இங்கு பதியலாம். உதாரணமாக செம்மை நெல் சாகுபடி. ஒரு சிறு நூலை இங்கு உருவாக்குவதன் மூலம் விவசாயத்திற்கு உதவ முடியும் என நம்புகிறோம். மேலும் w:தமிழக சமுதாய வானொலிகளையும் இங்கு அழைக்கிறோம். விவசாயம் சார்ந்த நுணுக்கங்களை முதன்மை வானொலி நிலையங்கள் கொடுத்து வருகின்றன, அவற்றை தொகுத்தால் விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம். துறை சார்ந்த நூல்கள் பட்டியல் இங்கு உள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு[தொகு]

உங்களால் முடியும் எனில் பாடநூல்களை இங்கு வெளியிட உதவுங்கள். ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் உள்ள பாடங்களைத் தொகுத்து வெளியிட கேட்டுக் கொள்கிறேன். மேலும் நமது தமிழ் சமுதாயம் உலகம் முழுமையும் தாங்கள் தமிழில் பயிலும் பாடநூல்களை இங்கு வெளியிட உதவலாமே.

பல்கலைக் கழகங்களுக்கு[தொகு]

ஒரு வேளை தாங்கள் பல்கலை ஆசிரியராக இருக்கலாம், நீங்கள் ஏதாவது ஒரு நூலை தமிழில் இயற்றுவதன் மூலம் தமிழின் வளர்ச்சிக்கு உதவ முடியும் என நம்புகிறோம். அப்படி முழு நூலை உருவாக்க முடியவில்லை என்றால் அந்த நூலின் ஆரம்ப பொருளடக்கப் பகுதியை ஆரம்பித்து வைப்பதன் மூலம் ஒரு புதிய நூல உருவாக தாங்கள் காரணமாக அமைய முடியும் என நம்புகிறோம்.

ஆய்வேடுகள் தொகுப்பில் இதுவரை தமிழில் உருவாக்கப்பட்டு உள்ள மாணவர்கள், பேராசியர்களின் தொழில்நுட்பபுல (phd) சுருக்கம் உருவாக்கும் நோக்கம் உள்ளது. இதில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறோம்.

பொறியாளர்களுக்கு[தொகு]

தமிழ் மொழியை சங்ககாலம் முதலே ஒரு இலக்கியத் தமிழாகவும், இயற் தமிழாகவும், இசைத் தமிழாகவும் பல அறிஞர், அரசர்களால், துறவியர்களால் உருவாக்கப்பட்டுவிட்டுள்ளது. ஆனால் தமிழை அறிவியல்த் தமிழாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் பொறியாளர்களுக்கு உண்டு என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. எனவே அறிவியல் தமிழை உருவாக்க பொறியாளர்களை அழைக்கிறோம். பொறியியல் சார் நூல்களைத் தொகுக்க அழைக்கிறோம். மேலும் சில தருணங்களில் அறிவியல் சொற்களை உருவாக்கும் பொழுது பின்பற்றப் பட வேண்டிய முறைகளைப் பற்றியப் பக்கத்தைக் காணவும்.


தமிழ் விக்கி நூல்கள் சமுதாயம்.

--Pitchaimuthu2050 06:30, 19 செப்டெம்பர் 2011 (UTC)

ஆத்திச் சூடி[தொகு]

பொதுவாக இலக்கிய நூல்கள் அனைத்தும், விக்கிமூலத்திலேயே உள்ளடக்கப்படல் வேண்டும். நீங்கள் தொடங்கியுள்ள கட்டுரை ஏற்கனவே விக்கிமூலத்திலுள்ளது பார்க்க!. உங்களது சுய ஆக்கத்தினை இங்கு சமர்ப்பிக்கலாம்.--சமீர் 13:53, 25 செப்டெம்பர் 2011 (UTC)

விக்கி மூலத்தில் வெறும் ஆத்திச் சூடி மட்டுமே உள்ளது, அதற்குரிய பொருள் அல்லது தெளிவுரை இல்லையே! ஏன் நாம் ஆத்திச் சூடி பொருள் விளக்கத்துடன் இங்கு உருவாக்க முடியாத என்ன?வேண்டுமென்றால் ஆத்திச் சூடி பெயருடன் பொருள் விளக்கம், மற்றும் ஒவ்வொரு ஆத்திச் சூடிக்கும் உரிய சிறுகதைகள் எனத் தொகுக்கப்படலாமே? எனவே ஆத்திச் சூடியும் விளக்கமும், சிறுகதையும் எனத் தலைப்பிட்டு ஆத்திச் சூடி நூலை இங்கு தயாரிக்க முடியும் என்றே எண்ணுகிறேன். சமீர் தங்களின் கருத்து என்ன?--Pitchaimuthu2050 08:23, 30 செப்டெம்பர் 2011 (UTC)

குழந்தைப் பாடல்கள்[தொகு]

வணக்கம், தங்களுடைய பங்களிப்பு வரவேற்கத்தக்கதாகும், குழந்தைப் பாடல்கள் சிறப்பாக உள்ளது, குழந்தைப்_பாடல்கள் என்பது ஒரு புத்தகமாகும், அதன் பக்கங்கள்(புத்தகத்தின் பக்கங்கள் அப்புத்தகத்தின் உள்ளேயே இருக்கவேண்டும்) குழந்தைப் பாடல்கள்/காக்காப் பாட்டு, எனும் அடிப்படையில் இருக்கலாம், எ.கா:(புத்தகத்தின் பெயர்/பக்கத்தலைப்பு)

  1. குழந்தைப்_பாடல்கள்/காக்காப்_பாட்டு
  2. குழந்தைப்_பாடல்கள்/நிலா

என்ற அடிப்படையில் தொகுக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். பிச்சுமுத்து தேவையான திருத்தங்களை மேற்கொண்டுள்ளார். தங்களது தொடர் பங்களிப்பினை விக்கிநூல்கள் எதிர்பார்க்கின்றது. நன்றி.--சமீர் 05:27, 27 செப்டெம்பர் 2011 (UTC)

அனைத்தும் சரி செய்துவிட்டோம், இனி நீங்கள் குழந்தைப்பாடல்களுக்குச் சென்று அதிலுள்ள இணைப்பினை சொடுகி திருத்தங்களை மேற்கொள்ளலாம், உங்களது சந்தேகங்களை இங்கேயே இடுகையிடுங்கள். நன்றி.
  1. குழந்தைப்_பாடல்கள்/காக்காப்_பாட்டு
  2. குழந்தைப்_பாடல்கள்/நிலா

--சமீர் 11:43, 27 செப்டெம்பர் 2011 (UTC)

நன்றி..--parvathisri 11:46, 27 செப்டெம்பர் 2011 (UTC)

பதக்கம்[தொகு]

சிறந்த வழிகாட்டுனர் பதக்கம்
வணக்கம் பார்வதிஸ்ரீ, விக்கிநூல்களில் தங்களின் ஆக்கங்கள் மிக அருமை. முக்கியமாக தாங்கள் குழந்தைகள் சார்ந்த புத்தகங்களை எழுதி வருகிறீர்கள். எனவே தங்களை சிறந்த குழந்தை நூல் தொகுப்பாளர் மற்றும் விக்கி நூல்களுக்கு வழிகாட்டி என கௌரவிப்பதை விக்கி நூலகள் சமுதாயம் பெருமையாகக் கொள்கிறது. இதன் மூலம் தாங்கள், ஆசிரியர்களையும், மாணவர்களையும் விக்கிநூல்கள் தொகுப்பதிலும் இருக்கும் நூல்களை மேம்படுத்துவதிலும் பங்கெடுக்கச் செய்ய வேண்டுமாய் தங்களிடம் வேண்டுகோளிடுகிறோம். தாங்கள் ஆசிரியர் என்பதால் ஏதேனும் சிறுவர் பாடநூல்களைக் கூடத் தொகுக்கலாம். அல்லது தங்களின் ஆக்கங்கள் ஒரு குறிபிட்ட பொருள் சார்ந்த நூல்களையும் தொகுக்கலாம். தங்களின் ஆதரவை பெரிதும் விக்கி நூல்கள் எதிர்பார்க்கிறது என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.
விக்கி நூல்கள் சமுதாயம்

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


விக்கியன்புக்கு என் உளமார்ந்த நன்றிகள். என்னாலியன்றதைச் செய்கிறேன்.--parvathisri 17:14, 30 செப்டெம்பர் 2011 (UTC)


பாட நூல்கள்[தொகு]

வணக்கம். பாட நூல்கள்களில் இடம் பெற வேண்டியவை குறித்த குறிப்புகள் தந்தால் நான் முயற்சி செய்கிறேன். பாட நூல்கள் எனும்பொழுது குழந்தைகளின் வயதுக்கும் வகுப்புக்கும் ஏற்றவாறு இருத்தல் அவசியம் என எண்ணுகிறேன். எனவே ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டம் தயாரித்து அந்தந்த தலைப்புகளில் இடம் பெற வேண்டிய கருத்துகளை கூறி விட்டால் யார் வேண்டுமாயினும் நூல்கள் தொகுக்க எளிதாக இருக்கும் என நினைக்கிறேன். இதற்கான் என்னுடைய ஒத்துழைப்பை நல்க நான் தயாராக உள்ளேன்.--parvathisri 11:49, 1 அக்டோபர் 2011 (UTC)

சிறந்த யோசனை, இவ்வாறான பொதுவான விக்கி கொள்கை தொடர்பான விடயங்கள் ஆலமரத்தடியில் இடுகையிடவேண்டும். ஏனெனில் உங்கள் பேச்சுப்பக்கமானது ஏனைய பயனரின் கவனிப்புப்பட்டியலில் இருந்தால் மாத்திரமே உங்ககளுக்கான பதில் கிடைக்கும், ஆகவே விக்கிநூல்களின் பொதுவான கலந்துரையாடல்கள் ஆலமரத்தடியில் இடுகையிடவும். ஆலமரத்தடி ஒரு பொதுவான கலந்துரையாடல்கள் இடம் பெறும் பகுதியாகும்.உங்களின் பேச்சினை ஆலமரத்தடிக்கு நகர்த்தியுள்ளேன்.--சமீர் 03:01, 2 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

எழுத்துகள்[தொகு]

வணக்கம்.

  1. எழுத்துகள் புத்தகத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கு ஒரு எழுத்து அதனை எழுதும் முறை , அது அடங்கியுள்ள சொற்கள் ஆகியவறைத் தந்தால் மிகவும் அருமையாக இருக்கும். கடைசி பக்கத்தில் அட்டவணை இருந்தால் நன்றாக இருக்கும். மழலையர் பதிப்பு ஆதலால் த.உழவன் அவர்களுடைய 'எழுத்து' (gif ) படங்களை இங்கு பயன்படுத்தலாமே.
  2. மழலையர் பதிப்பிற்கான படங்களுக்கு கூகுள், ஃப்லிக்கர் போன்றவற்றில் வெளி வந்துள்ள (creative commons ) உரிமையுள்ள படங்களைப் பயன்படுத்தலாமா? அதற்கு எதேனும் எண்ணிக்கை அளவுகள் உள்ளனவா? ஏனெனில் படங்களுடன் கூடிய விளக்கங்களே மழலையர் நூலுக்கு ஏற்றவை. --parvathisri 17:20, 4 அக்டோபர் 2011 (UTC)
இந்த உரையாடலுடன் சம்பந்தப்பட்ட கலந்துரையாடல்கள் ஆலமரத்தடியில் உள்ளதால், இதை ஆலமரத்தடிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.--சமீர் 01:41, 5 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

இன்று பகுதி தொகுக்க அழைப்பு[தொகு]

தமிழ் விக்கி நூல்கள் சமுதாயம் தங்களின் உதவியை நாடுகிறது

பயனர்:Shameermbm சில வாரங்களுக்கு முன்னர் ஒரு பகுதியை Wikibooks:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் ஆரம்பித்து வைத்து உள்ளார். அதனை இன்று என்னும் தொடுப்பாக முதல் பக்கத்தில் கொடுத்து உள்ளோம். இந்த பகுதியை தொகுக்க அன்றைய நாளில் உள்ள சிறப்புக்களையும், வரலாற்றில் நடந்த நிகழ்வுகளையும் தொகுக்கலாம் என்பது இந்தத் திட்டத்தின் நோக்கம். இதனைத் தொகுக்க விக்கி நூல்கள் அன்பர்களை அழைக்கிறோம். தங்களின் உதவியின் மூலம் இந்தப் பகுதியை முழுமையடைய வைக்க முடியும் என எண்ணுகிறோம். ஆகவே இன்று என்னும் பகுதியை தொகுக்க தங்களுக்கு அழைப்பு விடுகிறோம்.


இந்த நாள் இனிதாக அமைய வாழ்த்துக்களுடன்,
விக்கி நூல்கள் சமுதாயம்.

மழலைக் கதைகள் -> புதிய புத்தகம் தொகுக்கப்பட்டு உள்ளது.[தொகு]

தங்களின் சிறுவர் கதைகளை, மழலைக் கதைகள் என்னும் புத்தகத்துடன் இணைத்து உள்ளோம். தாங்கள் அங்கு சென்று ஒரு பார்வை பார்த்துக் கொள்ளவும். அன்புடன், --Pitchaimuthu2050 08:43, 20 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

வணக்கம்[தொகு]

நீதிக் கதைகள், (நீதிக்கதைகள்/ நீதிக்கதைகள்), (நீதிக்கதைகள் ஈசாப் கதைகள்)ஆகிய மூன்றும் ஒன்றே. இந்த தலைப்புகளையும்' மழலையர் கதைகள்' என்ற தலைப்புடனேயே இனைக்கக் கோருகிறேன். நான் தலைப்பு உருவாக்குவதில் குழப்பம் அடைந்ததால் இவை இவ்வாறு அமைந்து விட்டன.--parvathisri 12:03, 21 அக்டோபர் 2011 (UTC)

தாங்கள் தொகுப்பது ஈசாப் நீதிக் கதைகள் என்றால் அவற்றை ஈசாப் நீதிக் கதைகள் என்ற புத்தகத்தை உருவாக்கி அதனுள் இடுவதே நலம் என எண்ணுகிறேன். மேலும் சிங்கமும் கரடியும் குள்ளநரியும், சேவலும் இரத்தினக் கல்லும், நாயும் அதன் நிழலும் இவற்றை ஈசாப் நீதிக் கதைகள் என்ற புத்தகத்தினுள் கொண்டு வருவதா அல்லது மழலையர் கதைகள் கீழே இருப்பது நல்லதா என்பதையும் தங்களே தீர்மானிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம். அன்புடன் --Pitchaimuthu2050 12:31, 21 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
மேலும் ஈசாப் நீதிக் கதைகள் என்பதை தனிப புத்தகமாக தொகுப்பதா அல்லது, மழலையர் கதைகள் என்ற புத்தகத்தினுள் ஒரு உப பகுதியாக தொகுப்பதா என்பதை தெரிவிக்கவும். அன்புடன், --Pitchaimuthu2050 12:34, 21 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
அவை அனைத்தும் ஈசாப் கதைகள் என்ற பெயரிலேயே தொகுக்கப்பட வேண்டும். மேலும் விலங்கு கதைகள், பறவைக் கதைகள், விடுகதைகள், தெனாலிராமன் கதைகள், மரியாதை ராமன் கதைகள், மாப்பசான் கதைகள் போன்றவற்றையும் தொகுக்க உத்தேசித்துள்ளேன். மேலும் பாடநூல்களில் எது மாதிரி நூல்கள் இடம் பெற வேண்டும் எனக் கூறினால் அதற்கான முயற்சியும் செய்கிறேன். --parvathisri 15:57, 21 அக்டோபர் 2011 (UTC)
அம்மா அவர்களுக்கு வணக்கம், தாங்கள் ஈசாப் நீதிக் கதைகள் புத்தகத்தினுள் தங்களின் புதிய ஈசாப் கதைகளை தொகுக்கும் வகையில் அந்தப் புத்தகம் உருவாக்கி உள்ளோம். தங்களின் கதைகளை படிக்க ஆவலாக உள்ளோம். மேலும் விலங்கு கதைகள், பறவைக் கதைகள், விடுகதைகள், தெனாலிராமன் கதைகள், மரியாதை ராமன் கதைகள், மாப்பசான் கதைகள் ஆகியவற்றையும் தனித் தனி புத்தமாக தொகுத்து அவற்றின் பொருளடக்கங்களை மழலையர் கதைகள் என்ற புத்தகத்துடன் இணைக்கலாம் என எண்ணுகிறோம். இப்படி செய்வது சரிபட்டு வரும் என்றே நினைக்கிறோம். தங்களின் கருத்தை எதிர் பார்க்கிறோம். தங்களுக்கும், தங்களின் குடுபத்தாருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அன்புடன், :e) Pitchaimuthu2050 17:59, 22 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
மேலும் பாடநூல்கள் பற்றி கேட்டு இருந்தீர்கள், எந்தமாதிரியான நூல்கள் என்பது பற்றி சிறப்பான வரையறைகள் எதுவும் இல்லை. மாணவர்களுக்கு பயனுள்ள நூல்களை பாடநூல்கள் எனக் கொள்ளலாம். எனவே, பாடநூல்களைப் பற்றி நாங்கள் தங்களுக்குச் சொல்வதை விட தாங்களே உருவாக்குவது சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் எங்களுக்குத் தெரிந்தது கணினியும், விசைப் பலகையும்தான்; ஆனால் தாங்கள் ஆசிரியை என்பதால் மாணவர்களும் அவர்களின் மனநிலையும் தாங்கள் உற்று கவனித்து இருப்பீர்கள், எனவே மாணவர்களுக்கு உகந்த நூல்களை தங்களே தயரிக்க முடியும் என்பதிலும், தங்களால் பாடத் திட்டத்தை உருவாக்க முடியும் என்பதிலும் மிகுந்த நம்பிக்கை கொண்டு உள்ளோம். மேலும் தாங்கள் முன்னமே ஒரு பாடத் திட்டம் உருவாக்கி அதனை விக்கி அன்பர்களுடன் பகிர்ந்து இருந்தீர்கள், அந்தத் திட்டமே நன்றாக இருந்தது. தங்களின் தமிழ் பணி சிறக்க இறைவனிடம் வேண்டுகிறோம். அன்புடன் --:Pitchaimuthu2050 18:19, 22 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

--parvathisri 12:15, 23 அக்டோபர் 2011 (UTC)== நன்றி == தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பிச்சமுத்து . தாங்கள் கூறியபடியே கதைகளைத் தொகுக்கலாம். அவாறே செய்து விடுகிறேன்.--parvathisri 12:15, 23 அக்டோபர் 2011 (UTC)

பாடம்:பாடநூல்கள் தங்களின் பார்வைக்கு[தொகு]

பாடம்:பாடநூல்கள் மற்றும் அவற்றை எவ்வாறு தொகுக்கலாம் என பல முறைகள் தாங்கள் கேட்டு இருந்தீர்கள். எனவே தற்போது பாடம்:பாடநூல்கள் இரண்டாம் வகுப்பு வரை தொகுத்து புத்தகமாக கொடுத்து உள்ளோம். ஆகவே தங்களின் மேலதிக கவனத்திற்கு கொண்டு வருகிறோம். தாங்கள் பாடம்:பாடநூல்கள் ஒரு பார்வை பார்த்து விடவும். பாடத்திட்டம் அனைத்தும் தாங்கள் ஆலமரத்தடியில் கொடுத்து இருந்தமை என்பதையும், தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். அன்புடன், --Pitchaimuthu2050 13:26, 23 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikibooks.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Parvathisri&oldid=8909" இலிருந்து மீள்விக்கப்பட்டது