உள்ளடக்கத்துக்குச் செல்

ஆய்வுக்கோவை- கட்டுரைத் தலைப்புகள்

விக்கிநூல்கள் இலிருந்து

அகில இந்தியப் பல்கலைக்கழத் தமிழாசிரியர் மாநாடு[தொகு]

1967 முதல் 1986 முடிய[தொகு]

திருப்பதி, திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் அனைத்திந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் சார்பாக நடந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கோவைப் பொருட்களஞ்சியம் - தொகுதி 1 அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொகுப்பாளர், திருவேங்கடவன் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் டாக்டர்.திரு தானியேல் தேவ சங்கீதம் ஆவார்கள். அவருக்குத் தமிழ் ஆய்வுலகம் சார்பாக எம் நன்றி!

இத்தொகுப்பினைப் பற்றித் திருவேங்கடவன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர்பேராசிரியர் டாக்டர். பொன்.சௌரிராசன் அவர்கள் கூறுவது:

“இன்றைய தமிழ், உலகளாவிய படைப்பிலக்கியங்களையும் உண்மை காணும் ஆராய்ச்சி நூல்களையும் இரு கண்களாக்ககொண்டு வளரவேண்டிய ஒரு காலகட்டத்தை அடைந்துள்ளது. இவ்விரு நெறிகளிலும் தமிழ் வாழவும் வளரவும் கருவி நூல்கள் பல இன்றியமையாது வேண்டப் பெறுகின்றன. அத்தகு கருவிநூல்களுள் பொருளடைவு நூல்களும், களஞ்சியங்களும் தலைசிறந்த இடத்தைப் பெறுகின்றன. இந்தத் தேவையை உணர்ந்து பொருளடைவு, களஞ்சியம், அகராதி ஆகிய பணிகளுக்கெனத் தன்னை முழுதும் ஈடுபடுத்திக் கொண்டு, இத்தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணி செய்துவரும் முனைவர். தானியேல் தேவ சங்கீதம் உழைத்து வருகிறார்.
இத்தகு உழைப்பை இந்த ஆண்டு நிகழ இருக்கும் அனைத்திந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்ற மாநாட்டுக்குப் பயன்படுத்த வேண்டுமென நான் விழைந்தேன். அவர் விருப்பமும் அதுவாகவே இருந்தது. எனவே இந்நாள் வரை வெளிவந்துள்ள ஆய்வுத் தொகுதிகளையெல்லாம் ஒன்று திரட்டிப் பொருட்களஞ்சியம் ஒன்று உருவாக்கும் திட்டம் உள்ளத்தில் தோன்றியது. அத்திட்டத்தைச் செயலாக்கும் பொறுப்பு முனைவர் தானியேல் தேவசங்கீதம் அவர்களிடம் விடப்பட்டது. அவரும் அவர் திட்டத்தின் வழி சில ஆய்வு மாணவர்களும் சேர்ந்து அனைத்திந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆய்வுக்கோவை பொருட்களஞ்சியத்தை உருவாக்கினார்கள்.
இவை அனைத்தையும் அச்சிட்டு வழங்க எண்ணினோம். பொருளாளர் முனைவர் செ.வை.சண்முகம் அவர்களை அணுகினோம். அவர்கள் இருபது தொகுதிகள் நிறைந்தபின் நூலாக வெளியிடலாம் என்று குறிப்பித்தார்கள். அதற்குள் ஆய்வுக்கோவைப் பொருட்களஞ்சியப் பணி பெரிதும் நிறைவேறி விட்டது. மேலும் வாராது வாய்த்த இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு எங்கள் துறை சார்பாகப் பொருட்களஞ்சியத்தைப் பேராளர் பெருமக்களுக்குப் பரிசாக வழங்கும் ஆர்வம் ஆற்றலுடையதாயிற்று. இவற்றையெல்லாம் தொகுத்து நோக்கியபோது தட்டச்சு செய்து மையொற்றி அளிப்பதற்கே நூறாயிரம் வெண் பொற்காசுகள் ஆகும்போல் தோன்றிற்று. எனவே, இவை சங்க இலக்கியம், நீதி இலக்கியம், காப்பியமும் புராணமும், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம், உரைகள், சமயமும் தத்துவமும், நாடகம், நாவல், சிறுகதை, தற்காலக்கவிதை/ இலக்கியம், இலக்கியத் திறனாய்வு, ஒப்பாய்வும் பிறமொழி இலக்கியமும், நாட்டுப்புறவியல் ஆகிய தலைப்புகள் அடங்கிய பகுதியை மட்டும் மையொற்றித் தருவதெனத் திட்டமிட்டோம். அத்திட்டத்தின்படி முதல்தொகுதியை மட்டும் உங்களுக்குத் தருகிறோம்.
இவற்றை இரவு பகல் பாராது சிறப்பாக நுண்மாண் நுழைபுலத்தோடு உருவாக்கி உதவிய முனைவர் தானியேல் தேவசங்கீதம் அவர்களையும், அவர்தம் குழுவையும் தமிழ்த்துறை சார்பாகவும் இம்மாநாட்டுக் கருத்தரங்கு சார்பாகவும் பாராட்டி வாழ்த்துகிறேன்”. [1]


பார்க்க[தொகு]

ஆய்வுக்கோவை 1. சங்க இலக்கியம்

ஆய்வுக்கோவை 2. நீதி இலக்கியம்

ஆய்வுக்கோவை 3. காப்பியமும் புராணமும்

ஆய்வுக்கோவை 4. பக்தி இலக்கியம்

ஆய்வுக்கோவை 5. சிற்றிலக்கியம்

ஆய்வுக்கோவை 6. உரைகள்

ஆய்வுக்கோவை 7. சமயமும் தத்துவமும்

ஆய்வுக்கோவை 8. நாடகம்

ஆய்வுக்கோவை 9. நாவல்

ஆய்வுக்கோவை 10. சிறுகதை

ஆய்வுக்கோவை 11. தற்காலக்ககவிதை/ இலக்கியம்

ஆய்வுக்கோவை 12. இலக்கியத் திறனாய்வு

ஆய்வுக்கோவை 13. ஒப்பாய்வும் பிற மொழி இலக்கியமும்

ஆய்வுக்கோவை 14. நாட்டுப்புறவியல்


[[ ]]

  1. முன்னுரை
  2. முனைவர் பட்ட ஆய்வேடுகள்
  3. எம்ஃபில் பட்ட ஆய்வேடுகள்
  4. முதுகலைப்பட்ட ஆய்வேடுகள்
  5. ஆய்வுத்தலைப்புகள்- எம்.லிட்./எம்.ஃபில் பட்டம்
  6. ஆய்வுத்தலைப்புகள்- பி.எச்டி பட்டம்
  7. ஆய்வுத்தலைப்புகள்
  8. ஆய்வுத்துணை நூல்கள்


[[]]

  1. அணிந்துரை - பொன்.சௌரிராசன்